டிக்டாக்கில் வரும் ஐந்து செய்திகளில் ஒன்று தவறானவை – NewsGuard

டிக்டாக் விடீயோக்களின் நம்பகத்தன்மையை பற்றிய அறிக்கையை நியூஸ்கார்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதில் ரஷ்யா-உக்ரைன் போர், கோவிட்-19 மற்றும் காலநிலை மாற்றம் போன்ற முக்கிய செய்தித் தலைப்புகளுக்கான TikTok தேடல் முடிவுகள் தவறான தகவல்களைக் கொண்டிருக்கின்றன.

அந்த தளத்தால் தானாகவே பரிந்துரைக்கப்பட்ட ஐந்து செய்தி வீடியோக்களில் கிட்டத்தட்ட ஒன்று தவறான தகவலைக் கொண்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர் என தெரிவித்துள்ளது.

இது பற்றி விளக்கமளித்துள்ள டிக்டாக் நிறுவனம் “தீங்கு விளைவிக்கும் தவறான தகவல்களை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். மேலும் அத்தகைய வீடியோக்கள் நீக்கப்படும்” என்று நியூஸ்கார்ட் அறிக்கைக்கு டிக்டாக் பதிலளித்துள்ளது.

author avatar
Dinasuvadu Web

Leave a Comment