“தேமதுரக் குரலோசை மீண்டும் வெள்ளித்திரை வானில் ஒலிக்க மீண்டு வாருங்கள்” எஸ்.பி.பி-க்கு பன்னீர்செல்வம் ட்வீட்.!

எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை குறித்து ஓ பன்னீர்செல்வம் ட்வீட் .

பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியனுக்கு கடந்த 5-ம் தேதி கொரோனா தொற்று உறுதியாகி சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டார். மறுநாள் அவருக்கு காய்ச்சல் குறைந்தது. 2 நாட்களில் முழுமையாக குணம் அடைந்து வீடு திரும்பி விடுவேன் என்று அவர் கூறினார்.

இதையடுத்து, கடந்த 13-ம் தேதி அவருடைய உடல்நிலை மோசம் அடைந்தது. அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். எஸ்.பி. பாலசுப்பிரமணியனை மருத்துவர்கள் தீவிர கவனித்து வருகின்றனர்.

உடல்நலம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் அவ்வப்போது அறிக்கை வெளியிட்டு வருகிறது. இதற்கிடையில் அவர் விரைவில் குணமடைந்து மீண்டு வர திரையுலகினர் மட்டுமின்றி பலரும் தங்களது பிரார்த்தனைகளை பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் ஓ பன்னீர்செல்வம் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில் தனது  அற்புத குரலால் லட்சக்கணக்கான ரசிகர்களின் இதயங்களில் தனக்கான தனி இடம் பிடித்த அன்புச்சகோதரர் எஸ்.பி பாலசுப்ரமணியம் அவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன். மேலும் தேமதுரக் குரலோசை மீண்டும் வெள்ளித்திரை வானில் ஒலித்திட மீண்டு வாருங்கள் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.