Monday, June 3, 2024

இனி பேட்டரி, மெத்தனால், எத்தனால் வாகனங்களுக்கு அனுமதி கட்டணம் கிடையாது.. தமிழக அரசு அரசாணை வெளியீடு!

பேட்டரி மூலம் இயக்கப்படும் வாகனங்களுக்கு அனுமதி கட்டணம் ரத்து செய்யப்பட்டு அரசாணை வெளியீடு. 

பேட்டரி மூலம் இயக்கப்படும் வாகனங்கள், போக்குவரத்து வாகனங்களாகப் பயன்படுத்தப்படும் மெத்தனால் மற்றும் எத்தனால் எரிபொருளில் இயக்கப்படும் வாகனங்களுக்கு அனுமதி கட்டணம் ரத்து செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, மெத்தனால், எத்தனால் மற்றும் பேட்டரி வாகனங்களுக்கு எந்த அனுமதி கட்டணமும் செலுத்த தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் விதிமுறைகளை பின்பற்றி அனுமதி கட்டணத்தை ரத்து செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மெத்தனால், எத்தனாலில் இயக்கப்படும் போக்குவரத்து வாகனங்களுக்கும் அனுமதி கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சரக்கு வாகனம் தவிர 3,000 கிலோ எடைக்கு குறைவான வாகனங்களுக்கும் அனுமதி கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

motor vehicle
[Image Source : Twitter/@Nandhini_Twits]
RELATED ARTICLES