,

இந்த டிவிக்கு ‘பை பை’ சொல்லும் நெட்ஃபிலிக்ஸ்? காரணம் இது தான்!

By

நெட்ஃபிலிக்ஸ்: அமெரிக்கா நிறுவனமான நெட்ஃபிலிக்ஸ் வருகிற ஜூலை-31 முதல் ஆப்பிள் டிவியின் ஒரு சில பழைய ஜெனெரேஷன் (Generation) டிவிகளுக்கு., குறிப்பாக 2-வது மற்றும் 3-வது ஜெனெரேஷன் மாடல்களுக்கான ஸ்ட்ரீமிங்கை நிறுத்த போவதாக நெட்ஃபிலிக்ஸ் பயனர்கள் மூலம் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், பழைய ஆப்பிள் டிவியின் ஜெனரேஷன் உபயோகிப்போர்கள் உடனடியாக புதிய டிவிகளுக்கு அப்டேட் செய்ய நெட்ஃபிலிக்ஸ் கேட்டுக்கொண்டதாக பயனர்கள் கூறுகின்றனர். இது எல்லா ஆப்பிள் டிவிகளுக்கும் இல்லாமல் புதிய ஆப்பிள் டிவிகளான 2015-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஆப்பிள் டிவி எச்டி (HD) முதல் தற்போது உள்ள ஆப்பிள் 4K டிவி உபயோகிப்போர்கள் நெட்ஃபிலிக்ஸ் ஸ்ட்ரீமிங்கை தொடரலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், இதற்கான காரணமாக நெட்ஃபிலிக்ஸ் பயனர்கள் கூறுவது என்னவென்றால், ‘பழைய மாடல் ஆப்பிள் டிவி உபயோகிப்பவர்கள் ஏதேனும் படம் பார்க்கும் பொழுது காரணம் இல்லாமல் இடையூறு ஏற்படுவதால் தொடர்ந்து நெட்ஃபிலிக்ஸ்க்கு மின்னணு மூலம் தகவல் அளித்துள்ளனர். இதனை கருத்தில் கொண்டு நெட்ஃபிலிக்ஸ் இந்த முடிவை எடுக்கப்போவதாக’, தெரிவித்து வருகின்றனர்.

Dinasuvadu Media @2023