நீட் முறைகேடு : சிபிஎஸ்இ அதிகாரிகளுக்கு சம்மன்

நீட் முறைகேடு தொடர்பாக சிபிஎஸ்இ அதிகாரிகளுக்கு தமிழக சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளது.2018-ஆம்  ஆண்டு நீட் தேர்வு நடத்திய சிபிஎஸ்இ அதிகாரிகள் ஆஜராக ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும் வெளிமாநிலத்தில் நீட் தேர்வு எழுதி மருத்துவ படிப்பில் சேர்ந்தவர்கள் விவரத்தை அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நடந்த ‘நீட்’ தேர்வில் ஆள் மாறாட்டம் முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த முறைகேட்டில் சென்னையை சேர்ந்த மருத்துவக்கல்லூரி மாணவர் உதித் சூர்யா உள்பட 15 பேர் போலீசார் கைது செய்துள்ளனர்.‘நீட்’ தேர்வு முறைகேடு தொடர்ந்து விசாரணை நடந்து வரும் நிலையில் தற்போது 2018-ம் ஆண்டு நடைபெற்ற தேர்விலும் முறைகேடு நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

2018-ம் ஆண்டு முறைகேடு நடந்ததாக சென்னை மருத்துவக்கல்லூரி ‘டீன்’ ஜெயந்தி சி.பி.சி.ஐ.டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சென்னை மருத்துவக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கும் மாணவர் தனுஷ்குமாரையும், அவரது தந்தை தேவேந்திரனையும் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தினர். அதில் தனுஷ்குமார் ‘நீட்’ தேர்வில் முதல் 50 இடங்களுக்குள் வந்து தெரியவந்தது.

இவரது தந்தை தேவேந்திரன் கட்டிடம் கட்டுவதற்கு தேவையான கருங்கல் ஜல்லிகளை லாரிகள் மூலம் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். ஆள்மாறாட்டம் மூலம் தேர்வு எழுதுவதற்கு தேவேந்திரன் இடைத்தரகர் மூலம் ரூ.20 லட்சம் லஞ்சமாக கொடுத்தது தெரியவந்தது. தனுஷ்குமாருக்காக பீகாரில் ஒருவர் இந்தியில் தேர்வு எழுதி உள்ளார்.

ஆனால் தனுஷ்குமாருக்கு இந்தி தெரியாது என்பதால் அவர் மாட்டிக்கொண்டார். இதனால் இருவரும் நேற்று கைது செய்யப்பட்டனர்.

Recent Posts

மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி ?வாங்க தெரிஞ்சுக்கலாம் .!

Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…

5 hours ago

நீங்கள் எட்டு வடிவ நடை பயிற்சி செய்பவரா? இதெல்லாம் அவசியம் தெரிஞ்சுக்கோங்க.!

8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…

6 hours ago

சுட்டெரிக்கும் வெப்பநிலை… அதிகரிக்கும் வெப்ப அலை… காரணம் என்ன.?

Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…

7 hours ago

என்னங்க சொல்லறீங்க? இது மட்டும் நடந்தா மும்பை ப்ளே ஆஃப் செல்லுமா?

Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…

8 hours ago

திடீரென பயங்கரமாக வெடித்து சிதறிய கல்குவாரி …விபத்து நடந்தது எப்படி.?

Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…

8 hours ago

அடேங்கப்பா.! ரத்த அழுத்தத்தை கூட குறைக்குமாம் தர்பூசணி விதைகள்.!

Watermelon seeds-தர்பூசணி விதைகளின் ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தர்பூசணியை சாப்பிட்டுவிட்டு அதன் விதைகளை தூக்கி எரிந்து விடுவோம். ஆனால் அந்த விதைகள்  நம்மில் பலரும்…

8 hours ago