தேசிய பெண் குழந்தைகள் தினம் இன்று..!

இந்தியாவில் ஜனவரி 24 அன்று தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இது 2009 ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படுகிறது. இந்நாளை இந்தியா முழுவதும் கொண்டாடுவதன் நோக்கம் பாலின சமநிலை, சமவேலைக்கு சமஊதியம் போன்ற கருத்துக்கள் அனைத்து மக்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும். மக்கள் மற்றும் சமூகத்தில் பெண் குழந்தைகளுக்கு சம வாய்ப்பு மற்றும் சம உரிமை கிடைப்பதை உறுதிசெய்வது ஆகும். பாலின சமநிலையை மேம்படுத்துவது. பெண் குழந்தைகளுக்கு கிடைக்கவேண்டிய உரிமையை உறுதி செய்வது போன்றவை முக்கிய நோக்கங்கள் ஆகும்.