விண்வெளி பயணத்தில் மீண்டும் சாவ்லா-சீறிபாய்ந்த நாசாவின் சிக்னஸ் கார்கோ

இன்று அதிகாலை நாசாவின் கல்பனா சாவ்லா விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தை நோக்கி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்திய வம்சாவளியை சேர்ந்தரான விண்வெளி வீராங்கணை கல்பனா சாவ்லாவின் பெயர் சூட்டப்பட்ட சிக்னஸ் கார்கோ(Cygnus Cargo) என்ற விணகலமானது சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 8 ஆயிரம் பவுண்ட் எடை பொருட்களை கொண்டு செல்லும் வகையில் விர்ஜினியாவில் இருந்து ஏவப்பட்டது.

இந்த விண்கலம் 2 நாள் பயணத்திற்கு பின் திங்கட்கிழமை  சர்வதேச வின்வெளி நிலையத்தை சென்றடையும்.இதற்கு முன் கடந்த வியாழன் அன்று இந்த விண்கலத்தை விண்ணில் ஏவ திட்டமிட்டிருந்த நிலையில் திடீரென்று தொழில்நுட்ப கோளாறு ஏற்படவே அப்போது இத்திட்டம் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலமாக இன்று மீண்டும் வீர பெண்மணி கல்பனா சாவ்லா விண்கலம் மூலமாக  தனது விண்வெளி பயணத்தை தொடர்ந்துள்ளார்.



author avatar
Kaliraj