,
katti soru

நாகூர் ஸ்பெஷல்.! கட்டுசோறு செய்வது எப்படி? வாங்க தெரிஞ்சுக்கலாம்.!

By

Variety rice-நாகூர் பகுதிகளில் மிக பிரபலமான கட்டுசோறு செய்வது எப்படி என இப்பதிவில் காணலாம்.

தேவையான பொருள்கள்:

  • அரிசி =1 டம்ளர்
  • எண்ணெய்=4 ஸ்பூன்
  • கடலைப்பருப்பு =1 ஸ்பூன்
  • கடுகு =1 ஸ்பூன்
  • வரமிளகாய் =5
  • பூண்டு =10 பள்ளு
  • வெங்காயம் =2
  • தேங்காய் பால் =1 டம்ளர்
  • மஞ்சள்  தூள் =கால் ஸ்பூன்
  • மிளகாய் தூள் =1 ஸ்பூன்
  • மிளகு தூள் = அரை ஸ்பூன்
  • ஜீரக தூள் =அரை ஸ்பூன்
  • புளி=நெல்லிக்காய் அளவு
  • கொத்தமல்லி இலைகள்

rice 1

செய்முறை:

முதலில் அரிசியை கழுவி 20 நிமிடங்கள் ஊற வைக்கவும். பிறகு குக்கரில் நான்கு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, கடலைப்பருப்பு ,கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும் .

poondu, onion

அடுத்ததாக வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பிறகு அதில் பூண்டை முழுசாக சேர்த்துக் கொள்ளவும். இப்போது மிளகுத்தூள், சீரகத்தூள் மஞ்சள் தூள், மிளகாய் தூள் போன்றவற்றை சேர்த்து கலந்து விடவும் .அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

coconut milk

பின்பு தேங்காய்ப்பால் ஒரு கப் சேர்த்து புளி கரைசல் ஒன்றை கப் சேர்த்து கலந்து விட்டு உப்பு தேவையான அளவு சேர்த்து ஒரு கொதி வந்த பிறகு அரிசியையும் சேர்க்க வேண்டும். இப்போது இரண்டு விசில் விட்டு இறக்கினால் கட்டுச் சோறு தயாராகி விடும் .விசில் அடங்கியதும் அதில் கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கவும்.

Dinasuvadu Media @2023