நவராத்திரி-மின்னும் மைசூரு..!தசரா விழா தொடக்கம்

நவராத்திரி திருவிழா இன்று முதல் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

கர்நாடக மாநிலத்தின் அடையாளமாக   திகழும் மைசூரு தசரா விழா வெகுவிமர்சையாக தொடங்கப்பட்டது.

விஜயதசமியையொட்டி ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும் இவ்விழா கர்நாடக மாநிலத்தின் பண்டிகையாக அரசே ஏற்று நடத்தி வருகிறது.

இந்நிலையில் முதல்வர் எடியூரப்பா தலைமையில் ஒரு உயர்மட்ட குழு அமைக்கப்பட்டு அக்குழுவினர் பல அம்சங்கள் குறித்து ஆய்வு செய்தது.பல கட்டுப்பாடுகளுடன்  நடப்பாண்டு தசரா விழாவை எளிமையாக நடத்த முடிவு எடுக்கப்பட்டது.இதற்கான ஏற்பாடுகள் தற்போது தயார் நிலையில் உள்ளது.

அதன்படி நடப்பாண்டின் தசரா விழாவானது அக்.,17ந்தேதி(இன்று) தொடங்கி அக்.,26ந் தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடத்தப்படும் என்று அரசால் அறிவிக்கப்பட்டது.

இன்று தசரா விழா மைசூருவில் கோலாகலமாக தொடங்கப்பட உள்ளது. மைசூரு சாமுண்டி மலையில் அரசியல் அல்லாத பொதுவான நபர் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு பூஜை செய்வதன் மூலம் மைசூரு தசரா விழா தொடங்கப்படும்.

அதேபோல் இந்த ஆண்டும் மைசூரு சாமுண்டி மலையில் வைத்து தசரா விழா தொடங்கப்பட உள்ளது. இது 410வது தசரா விழா என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று (சனிக்கிழமை) காலை 7.30 மணியில் இருந்து 8.15 மணிக்குள் சுபமுகூர்த்தத்தில் அலங்கரிக்கப்பட்ட வெள்ளித்தேரில் எழுந்தருளிய சாமுண்டீஸ்வரி அம்மனை வணங்கி சிறப்பு பூஜைகள் செய்து மலர்களை தூவி தொடங்கப்பட்டது.

 கொரோனாப் போரில் முன்களத்தில் நின்று போராடி வரும் ஒருவருக்குத்தான் தசரா விழாவை தொடங்கி வைக்க வாய்ப்பு வழங்கப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்தது. அதன்படி  கொரோனா போராளியான டாக்டர் மஞ்சுநாத்துக்கு இந்த ஆண்டு தசரா விழாவை தொடங்கி வைக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தசரா தொடக்க விழாவில் முதலமைச்சர் எடியூரப்பா, அமைச்சர்களான எஸ்.டி.சோமசேகர், பி.சி.பட்டீல், எம்.எல்.ஏ.க்கள் ஜி.டி.தேவேகவுடா, ராமதாஸ், நாகேந்திரா, ஹர்ஷவர்தன், நிரஞ்சன் குமார், மாவட்ட கலெக்டர் ரோகிணி சிந்தூரி ஆகியோர் கலந்து கொள்ளும் இந்நிகழ்ச்சிக்கு 200 பேர் மட்டுமே கலந்து கொள்ள  அனுமதி அளிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.



author avatar
Kaliraj