மும்பை : புத்தாண்டுக்கு முன்பு இரண்டாம் அலை நோய்த்தொற்று பரவ வாய்ப்பு.!

மும்பையில் புத்தாண்டுக்கு முன்பு இரண்டாம் அலை நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளதாக பிஎம்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

மும்பையில் தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து உள்ளது . தீபாவளிக்கு பின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற எதிர்பார்க்கப்பட்டது .ஆனால் கொரோனாவின் இரண்டாவது அலை நோய் தெற்றானது புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு முன்பு பரவும் அபாயம் உள்ளது .எனவே அதற்கேற்ப தான் புத்தாண்டை கொண்டாட அனுமதிக்கப்படும் .

குறைவான பாதிப்பு எண்ணிக்கையாக இருந்தால் அதற்கேற்ப புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுபாடுகள் விதிக்கப்படும் என்றும் , ஹோட்டல் மற்றும் உணவகங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படுமா என்பது குறித்த இறுதி முடிவு விரைவில் எடுக்கப்படும் என்றும் பிரஹன் மும்பை மாநகராட்சி(பிஎம்சி) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் புத்தாண்டுக்கு முன்பு இரண்டாம் அலை தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதால் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடருமாறு மக்களுக்கு பிம்சி அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தது .

தற்போது மும்பையில் 50% உணவகங்களும் ,மதுபான கூடங்களும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது .மேலும் 50 பேர் மட்டுமே திருமண நிகழ்வுகளில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Leave a Comment