அமோனியா வாயு கசிவு : மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்த மா.சுப்ரமணியன்!

சென்னை எண்ணூர் கடல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கோரமண்டல் தொழிற்சாலையின் திரவ அமோனியம் எடுத்து வரும் குழாயிலிருந்து அமோனியா வாயு நேற்று நள்ளிரவு கசிவு ஏற்பட்டது. இதனால் மக்கள் மூச்சிதிணறல் ஏற்பட்டு அவதியில் இருக்கிறார்கள். இந்த அமோனியா வாயு கசிவு ஏற்பட முக்கிய காரணமே கடலுக்கு அடியில் இருந்து தொழிற்சாலைக்கு வரும் குழாயில் ஏற்பட்ட உடைப்பு தான் என தெரியவந்துள்ளது.

எண்ணூர் கடல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கோரமண்டல் தொழிற்சாலையின் திரவ அமோனியம்
எடுத்து வரும் குழாயிலிருந்து அமோனியா வாயு கசிந்ததை மாசு கட்டுப்பாடு வாரியம் உறுதியும் செய்தது. அமோனியா ஆலை வாசலில் காற்றில் 400 microgram/m3 ஆக இருக்க வேண்டும். ஆனால், நேற்று கசிவு ஏற்பட்டதன் காரணமாக  அமோனியா  2090 microgram/m3 ஆகவும், கடலில் 5 mg/L ஆக இருக்க வேண்டிய அமோனியா, 49 mg/L இருப்பதாகவும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

சேதமடைந்த கோயில்களை சீரமைக்க ரூ 5 கோடி நிதி! சேகர்பாபு தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் முடிவு!

மேலும், தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் ஒப்புதலோடு மட்டுமே குழாயை இயக்க வேண்டும் என மாசு கட்டுப்பாடு வாரியம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் திடீரென  அமோனியம் கசிவு ஏற்பட்டதால் மக்கள் மூச்சிதிணறல் ஏற்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர். தற்போது அவர்களுக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அமோனியா வாயு கசிவினால் உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து அவர்களுடைய நலம் பற்றி விசாரித்துள்ளார்.  மேலும், அமோனியம் வாயு வெளியேறிய தனியார் தொழிற்சாலையை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.