Monday, June 3, 2024

இந்தியாவில் 65 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகள் தடை..! வாட்ஸ்அப் அதிரடி..!

இந்தியாவில் 65 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகளை வாட்ஸ்அப் நிறுவனம் தடை செய்துள்ளது.

உலகில் உள்ள பல மில்லியன் மக்களால் செய்தி அனுப்புவதற்கு பெரும்பாலும் பயன்படுத்தப்பட கூடிய செயலிகளில்  ஒன்றுதான் வாட்ஸ்அப். தற்பொழுது மெட்டாவிற்கு சொந்தமான இந்த வாட்ஸ்அப் செயலி இந்தியாவில் 65 லட்சத்திற்கும் அதிகமான தவறான கணக்குகளை தடை செய்து உள்ளது.

சமீபத்தில், ஜிபி வாட்ஸ்அப் போன்ற போலியான வாட்ஸ்அப்களை பயன்படுத்தும் பயனர்களின் கணக்குகள் தடை செய்யப்பட்டு வந்து கொண்டிருக்கும் நிலையில், கடந்த மே 1 முதல் மே 31 வரை மொத்தம் 6,508,000 வாட்ஸ்அப் கணக்குகளை வாட்ஸ்அப் தடை செய்துள்ளது.

வாட்ஸ்அப் நிறுவனம் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021 கீழ் இணங்கி, அதன் மாதாந்திர அறிக்கையை வெளியிட்டது. அதில் இந்த கணக்குகளில், 24 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகள், பயனர்களிடமிருந்து புகார்கள் வருவதற்கு முன்பே, முன்கூட்டியே தடை செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 500 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட வாட்ஸ்அப், ஏப்ரல் மாதத்தில் 74 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகளை தடை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES