தெலுங்கில் இளைய சூப்பர் ஸ்டாராக களமிறங்கும் அசுரன் தனுஷ்.!

இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ளது தற்போது உறுதியாகியுள்ளது. 

நடிகர் தனுஷ் தற்போது தி க்ரே மேன், மற்றும் அத்ராங்கி ரே ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். தற்போது இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனது 43-வது படமான மாறா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை சத்தியஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.

தமிழா தொடர்ந்து நடிகர் தனுஷ் தெலுங்கு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். அதாவது, தனுஷ் நடிக்கும் முதல் தெலுங்கு படத்தை இயக்குனர் சேகர் கம்முலா இயக்குகிறார்.  ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில்உருவாகவுள்ளது.

இந்த நிலையில், நேற்று நடிகர் தனுஷ் தனது 38 வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் இளைய சூப்பர் ஸ்டார் என்று அடைமொழி வைக்கப்பட்டு போஸ்டர் ஒன்று வெளியிட்டுள்ளது. தொடரி படத்தின் போது தனுஷை இளைய சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்கள் கூறிவந்தனர். அதனை தொடர்ந்து அசுரன் படம் வெளியாகும் போது அசுரன் தனுஷ் என்றும் கூறிவந்தனர் எனப்து குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.