#Breaking:குரங்கு அம்மை நோய் சர்வதேச அவசரநிலையாக அறிவிப்பு – உலக சுகாதார அமைப்பு..!

உலக சுகாதார அமைப்பு  வேகமாக பரவி வரும் குரங்கு அம்மை நோயை உலக சுகாதார அவசர நிலையாக அறிவித்துள்ளது.உலக சுகாதார அமைப்பு இன் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம்  இன்று அறிவித்தார்.

உலகளவில் 75 க்கு மேற்பட்ட நாடுகளில் சுமார் 16,000 பேருக்கு குரங்கு அம்மை நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர்.இதுவரை ஆப்பிரிக்காவில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

குரங்கு அம்மை தொற்று வேகமாக பரவி வருவதால், பரவுவதை தடுக்கவும்,உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்கவும், தற்போது உலக சுகாதார அமைப்பு குரங்கு அம்மை நோயை  உலக சுகாதார அவசர நிலையாக அறிவித்துள்ளது.

மேலும், இந்த வைரஸ் தொற்று ஒரு நபரிடம் இருந்து மற்ற நபருக்கு காயங்கள், உடல் திரவங்கள், சுவாச நீர்த்துளிகள் போன்றவற்றிலிருந்து பரவுவதாகவும் உலக சுகாதார நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment