சிவில் சர்வீஸ் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மெட்ரோ சேவை தொடக்கம்.!

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யுபிஎஸ்சி) சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு இன்று நடைபெறுகிறது. இந்த தேர்வு இந்தியாவில் 72 நகரங்களில் 2569 மையங்களில் நடைபெறுகிறது. இந்நிலையில், யுபிஎஸ்சி தேர்வு எழுதும் மாணவர்களின் வசதியாக டெல்லி மெட்ரோ சேவை இன்று காலை 6 மணி முதல் தொடங்கியது.

அந்த வகையில், யுபிஎஸ்சி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வசதியாக, டெல்லி மெட்ரோ ரயில் இன்று முதல் அனைத்து நிலையங்களிலிருந்தும்  இயக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், யுபிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, முதற்கட்ட தேர்வுக்கு முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கியுள்ளது. முகக்கவசம் இல்லாத மாணவர்கள் தேர்வறைக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதுமட்டுமில்லாமல், தங்களது நுழைவு சீட்டு அந்தந்த தேர்வு மையத்திற்கு கொண்டு வர வேண்டும், இல்லையெனில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.