இயக்குநராக களமிறங்கும் 'மீசையை முறுக்கு' பட நடிகர்.! வைராலாகும் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர்.!

மீசையை முறுக்கு பட நடிகரான ஆனந்த் 'நண்பன் ஒருவன் வந்த பிறகு' என்ற

By ragi | Published: Aug 02, 2020 05:21 PM

மீசையை முறுக்கு பட நடிகரான ஆனந்த் 'நண்பன் ஒருவன் வந்த பிறகு' என்ற படத்தினை இயக்குகிறார். தற்போது அதன் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ரை வெளியிட்டுள்ளனர்.

ஹிப்ஹாப் ஆதியின் மீசையை முறுக்கு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் ஆனந்த் ராம். இவர் தற்போது இயக்குநராக களமிறங்குகிறார். அதன் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் இன்று சிவகார்த்திகேயன் அவர்களால் வெளியிடப்பட்டது. 'நண்பன் ஒருவன் வந்த பிறகு' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் பேனர்ஸ் தயாரிக்கிறது.

மேலும் காசிப் இசையமைக்கும் இந்த படத்தில் குமாரவேல், லீலா, விஷாலினி, ஆனந்த், பவானி ஸ்ரீ, ஆர்ஜே விஜய், மோனிகா, கலக்க போவது யாரு பாலா என பலர் நடிக்கின்றனர். தமிழ் செல்வன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.

 
Step2: Place in ads Display sections

unicc