சினிமா கேரியரில் சாய்பல்லவி தவறவிட்ட மணிரத்னம் படம்.! எந்த படம் தெரியுமா.?

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான காற்று வெளியிடை படத்தினை சாய்பல்லவி

By ragi | Published: Jul 13, 2020 01:26 PM

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான காற்று வெளியிடை படத்தினை சாய்பல்லவி தவறவிட்டதாக கூறப்படுகிறது.

தென்னிந்திய சினிமாயுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சாய்பல்லவி. மலையாளத்தில் பிரேமம் படத்தின் மூலம் பிரபலமானவர் சாய்பல்லவி. கடைசியாக சூர்யாவுடன் என். ஜே. கே படத்தில் நடித்திருந்தார். தமிழில் அவர் நடித்த அனைத்து படங்களும் அவ்வளவாக பேசப்படவில்லை. ஆனால் தெலுங்கில் அவர் நடித்த அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது தெலுங்கில் அதிகம் கவனம் செலுத்துகிறாராம் சாய்பல்லவி. தற்போது நாக சைதன்யாவிற்கு ஜோடியாக லவ் ஸ்டோரி என்னும் படத்திலும், ராணா நடிக்கும் விராட பர்வம் படத்தில் நக்சலைட்டாக நடிக்கிறார். மேலும் நானியுடன் ஒரு படத்திலும் கமிட்டாகியுள்ளார்.

இந்த நிலையில் சாய்பல்லவி தனது சினிமா கேரியரில் ஒரு முக்கியமான படத்தை தவறவிட்டதாக கூறப்படுகிறது. ஆம் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான காற்று வெளியிடை படத்தில் முதலில் நடிக்கவிருந்தது சாய்பல்லவி தானாம். ஆனால் அவரால் அப்போது அந்த படத்தில் நடிக்க இயலாமல் போனதாகவும், அதன் பிறகு தான் அந்த கதாபாத்திரத்தில் அதிதிராவ் ஹைத்ரி நடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Step2: Place in ads Display sections

unicc