#IPL2022: வெற்றிபெறுமா ராஜஸ்தான்? லக்னோ அணிக்கு 179 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் தொடரில் தற்பொழுது நடைபெற்று வரும் 63-வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 178 ரன்கள் குவித்துள்ளது. 

ஐபிஎல் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், சூப்பர் சண்டே ஆன இன்று இரண்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதில் முதல் போட்டியில் குஜராத் அணி வெற்றிபெற்றதை தொடர்ந்து, தற்பொழுது நடைபெற்று வரும் இரண்டாம் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகள் மோதி வருகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் – பட்லர் களமிறங்கினார்கள். இதில் 2 ரன்கள் மட்டுமே அடித்து பட்லர் தனது விக்கெட்டை இழந்தார். அவரைதொடர்ந்து களமிறங்கிய சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வாலுடன் இணைந்து சிறப்பாக ஆடினார். 32 ரன்கள் அடித்து சஞ்சு சாம்சன் தனது விக்கெட்டை இழக்க, ஜெய்ஸ்வால், 41 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை இழந்தார்.

பின்னர் களமிறங்கிய படிக்கல் 39 ரன்களுக்கும், ரியான் பராக் 19 ரன்கள் எடுத்து தங்களின் விக்கெட்டை இழந்தார்கள். இறுதியாக ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 178 ரன்கள் எடுத்தது. 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது லக்னோ அணி பேட்டிங் செய்யவுள்ளது.

Recent Posts

ஊழல்வாதி என நிரூபித்தால் என்னை தூக்கிலிடுங்கள்..! பிரதமர் மோடி ஆவேசம்.!

சென்னை : என்னை ஊழல்வாதி என நிரூபித்தால் தூகிலுடுங்கள் என்று ஆவேசமாக பிரதமர் மோடி அவர்கள் பேசி இருப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நாடெங்கும்…

14 mins ago

டெல்லி மதுபான கொள்கை வழக்கு.! குற்றப்பத்திரிகையில் முதன் முதலாக அரவிந்த் கெஜ்ரிவால் பெயர்.!

சென்னை: டெல்லி மதுபான கொள்கை வழக்கிற்கான குற்றப்பத்திரிகையில் அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சி பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. கடந்த 2021 ஆம் ஆண்டு டெல்லியில் ஆளும் ஆம்…

20 mins ago

பைக் பஞ்சர் ஆச்சுன்னா அஜித் என்ன செய்வாரு தெரியுமா? என்னங்க இந்த விஷயத்தை நம்பவே முடியல!!

சென்னை : பைக் பஞ்சர் ஆனால், அஜித் பைக்கை அந்த இடத்திலே நிறுத்திவிட்டு சென்றுவிடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித்குமார் பொதுவாகவே பைக் மீது அதிகம்…

29 mins ago

மின்சரம் தாக்கி செயலிழந்த சிறுவனின் இதயம்.. நொடி பொழுதில் உயிரை மீட்ட மருத்துவர்.! வைரல் வீடியோ..

சென்னை: மின்சாரம் தாக்கி சுயநினைவை இழந்த சிறுவனைCநொடி பொழுதில் காப்பாற்றிய பெண் மருத்துவர் வீடியோ வைரலாகி வருகிறது. ஆந்திர மாநிலத்திலுள்ள விஜயவாடா நகரத்தில் அய்யப்பா நகரில் மின்சாரம்…

39 mins ago

மழை நேரத்தில் ஏசி போடலாமா? நிபுணர்கள் கூறுவது என்ன ?

சென்னை : மழை பெய்யும் நேரத்தில் ஏசியை உபயோகப்படுத்தலாமா கூடாதா ? மழை பெய்யும் பொழுது பயன்படுத்தினால் என்ன ஆகும் என்பதை பற்றி இந்த தகவலில் நாம்…

43 mins ago

சவுக்கு சங்கருக்கு மே 28வரையில் நீதிமன்ற காவல்.! திருச்சி நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை: சவுக்கு சங்கருக்கு மே 28வரையில் நீதிமன்ற காவல் விதித்தது திருச்சி குற்றவியல் நீதிமன்றம். பெண் போலீசார் பற்றி அவதூறாக பேசியாக யூ-டியூபர் சவுக்கு சங்கர் மற்றும்…

44 mins ago