இனி மெட்ரோ ரயிலில் மதுபாட்டில்கள் கொண்டு செல்ல அனுமதி.!

ரயில்களில் பயணிகள் 2 சீல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை எடுத்துச் செல்ல டெல்லி மெட்ரோ நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

டெல்லி மெட்ரோ ரயில் 20 ஆண்டுகளில் நகரத்தின் உயிர்நாடியாக மாறியுள்ளத, போக்குவரத்துக்கு மிகவும் வசதியான வழிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்நிலையில், ஒரு நபர் 2 சீல் வைக்கப்பட்ட மது பாட்டில்களை ரயிலில் எடுத்து செல்லலாம் என்று டெல்லி மெட்ரோ நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

DMRC issues official statement
DMRC issues official statement Image Source OfficialDMRC

ஆனால், பயணத்தின்போது பயணிகளின் ஆவணங்களை முறையாக சரிபார்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மெட்ரோவில் பயணிகள் யாரேனும் குடிபோதையில் அநாகரீகமாக நடந்து கொண்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதாவது, துவாரகா செக்டார் 21 மற்றும் நொய்டா எலக்ட்ரானிக் சிட்டியை இணைக்கும் ப்ளூ லைனில் பயணித்த மெட்ரோவில் மதுவை எடுத்துச் செல்ல முடியுமா என்று ட்விட்டர் பயனர் ஒருவர் அதிகாரிகளிடம் கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த டிஎம்ஆர்சி, ” ஒரு நபருக்கு டெல்லி மெட்ரோவில் 2 சீல் செய்யப்பட்ட மது பாட்டில்கள் அனுமதிக்கப்படுகின்றன” என்று  ரிப்லே செய்துள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.