யோகி பாபுவுக்கு ஜோடியாகும் லட்சுமி மேனன்.?

யோகி பாபுவுக்கு ஜோடியாக நடிகை லட்சுமிமேனன் புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

தமிழ் சினிமாவில் பிஸியான நடிகராக வலம் வருபவர் நடிகர் யோகிபாபு. தற்போது வலிமை, பிஸ்ட், போன்ற பெரிய திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதை தவிற சில திரைப்படங்களிலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

இந்நிலையில், நடிகர் யோகிபாபு அடுத்ததாக இயக்குனர் ஸ்வாதிஷ் என்பவர் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை அன்கா மீடியா நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் யோகி பாபுவுடன் ஓவியா நடிக்கிறார். இப்படத்திற்கு “கான்ட்ராக்டர் நேசமணி” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பூஜை இன்று தொடங்கப்பட்டது.

இதனையடுத்து அடுத்ததாக நடிகர் யோகி பாபு, சுசீந்திரன் உதவியாளர் இயக்கும் படமொன்றில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த படத்தில் யோகி பாபுவிற்கு ஜோடியாக நடிகை லட்சுமிமேனன் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.