பெண்களே! இந்த 5 எளிய வீட்டு குறிப்புகளை தெரிந்து வைத்து கொள்ளுங்கள்..!

எளிமையான ஐந்து வீட்டு குறிப்புகளை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். 

பெண்களுக்கு வீட்டில் தினமும் காலை முதல் இரவு வரை வேலை இருந்து கொண்டே இருக்கும். வீட்டில் சமைக்கும் வேலை, குழந்தைகளை பராமரிப்பது, துணி துவைப்பது, வீட்டை சுத்தம் செய்வது என அடுக்கி கொண்டே போகலாம். இதனை செய்வதிலேயே ஒவ்வொரு நாளும் சென்று விடும். இதில் நமக்கென்று தனியாக நேரம் ஒதுக்க முடியாது. அதனால் செய்யும் வேலையை சில குறிப்புகளை பயன்படுத்தி எளிமையாக்கலாம்.

குறிப்பு 1: பெண்கள் புடவை கட்டும் பொழுது முந்தானையை அடுக்கி பிளவுஸில் வைத்து ஊக்கு போடுவது வழக்கம். சில சமயங்களில் ஊக்கு பிளவுசை கிழித்து விடும். இது போன்று நிகழாமல் இருக்க ஊக்கில் ஒரு குண்டூசியை வைத்து அதில் குண்டூசி ஒட்டிக்கொண்டு இருக்க நெயில்பாலிஷ் அல்லது கம்மை பயன்படுத்தி ஒட்ட வேண்டும். பின்னர் புடவை கட்டும் இது போன்று ஊக்கு பிளவுசை கிழிக்காது.

குறிப்பு 2: பூண்டு உரிப்பது கடினமான செயலாக இருக்கும். இதை எளிமையாக செய்ய ஊக்கின் பின் புறத்தில் இருக்கும் வட்டமான வடிவத்தை பூண்டின் மேற்பகுதியில் வைத்து அழுத்த வேண்டும். எளிமையாக பூண்டின் தோல் உரிந்து விடும்.

குறிப்பு 3: சமையல் அறையில் வைத்திருக்கும் பருப்பு பொருட்களில் வண்டு, பூச்சி பிரச்சனை ஏற்படும். இதனை தடுக்க பருப்பு வைத்திருக்கும் டப்பாவில் பிரியாணி இலை அல்லது கிராம்பு 2 சேர்த்தால் போதும். வண்டு, பூச்சி பிரச்னை ஏற்படாது.

குறிப்பு 4: கேஸ் அடுப்புகளில் சமையல் செய்த பின்னர், எண்ணெய் பிசுபிசுப்பு மற்றும் சமையல் செய்த கறை இருக்கும். இதனை சோப்பு போட்டு தேய்த்தாலும் சில கறைகள் எளிதில் போகாது. இதற்கு எளிய வழி, நீங்கள் பல் துலக்கும் பேஸ்டை எடுத்து பிசுபிசுப்பு இருக்கும் பகுதியில் நன்கு தேய்த்து விடுங்கள். பின்னர் கழுவி பாருங்கள், உங்கள் அடுப்பு பார்ப்பதற்கு அவ்வளவு சுத்தமாக இருக்கும்.

குறிப்பு 5: காலையில் பருப்பு வைத்து வைத்து சமைப்பதற்கு முதல் நாளே தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். ஒருவேளை ஊற வைக்க மறந்துவிட்டீர்கள் என்றால் அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வையுங்கள். பின்னர் இந்த தண்ணீரை பருப்பு மேல் ஊற்றி வைக்க வேண்டும். இந்த சூடு ஆறும் வரை காத்திருங்கள். ஆறிய பின்னர் குக்கரில் வைத்து 5 அல்லது 6 விசில் வைத்தால் போதும்.