பெண்களே…! இனிமே இந்த நாரை தூக்கி எறியாதீங்க…!

தேங்காயை உடைக்கும் போது வரக்கூடிய தேங்காய் நாரை கழிவு என்று தூக்கி எறிவதுண்டு. அந்த தேங்காய் நாரில் பல வகையான நன்மைகள் உள்ளது.

நாம் நமது வீடுகளில், தினமும் சமையலின் போது தேங்காயை பயன்படுத்துவதுண்டு. இந்த தேங்காயை உடைக்கும் போது வரக்கூடிய தேங்காய் நாரை கழிவு என்று தூக்கி எறிவதுண்டு. ஆனால், இந்த தேங்காய் நாரில் பல வகையான நன்மைகள் உள்ளது. அவை என்னவென்று பார்ப்போம்.

தேங்காய் நாரை எடுத்து, அதை இரண்டு கைகளாலும் உதிர்க்க வேண்டும். அப்படி உதிர்க்கும் போது வரக் கூடிய துகள்களை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அப்படி எடுத்து வைத்துள்ள துகள்களை, நாம் வளர்க்க கூடிய செடிகளுக்கும் போட்டு விட வேண்டும்.

இவ்வாறு போடுவதால், நாம் வெளியே சென்றாலும், யாரிடமும் செடிக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும் என சொல்லிவிட்டு செல்ல வேண்டாம். ஏனென்றால், நாம் செடியை சுற்றி போட்டிருக்கும் இந்த துகள்களோடு, ஒருமுறை தண்ணீர் ஊற்றி விட்டு சென்றாலே, நீண்ட நாட்களுக்கு தண்ணீர் பசை இருப்பது போல இருக்கும்.

தேங்காய் நார்களை மாலை வேளையில் கொளுத்தி விட்டால், அந்த வாசனைக்கு கொசு தொல்லை இருக்காது. பின் நாம் பாத்திரம் கழுவ, அதற்கென்று விலை கொடுத்து ஸ்கிரப்பர் வாங்காமல், அந்த தேங்காய் நார்களை சுருட்டி எடுத்து வைத்துக் கொண்டால் அவற்றை கொண்டு பாத்திரம் கழுவலாம். அவ்வாறு கழுவும் பொது, கறைகள் எல்லாம் போய்விடுகிறது. மேலும், இந்த நார்களில் கிருமிகளை அழிக்கக் கூடிய ஆற்றலும் உள்ளது.

Tags: coconutstork

Recent Posts

கிரிவலம் செல்லும் போது செய்ய வேண்டியதும் ..செய்ய கூடாததும்..!

கிரிவலம் -கிரிவலம் ஏன் செல்ல வேண்டும் என்றும் அதற்கான பலன்களைப் பற்றியும் இப்பதிவில் காணலாம். கிரிவலம் என்றால் மலையை வலம் வருதலாகும். அதாவது மலையை சுற்றி வழிபாடு…

1 hour ago

IPL2024: டெல்லி அபார வெற்றி… பிளே ஆப் வாய்ப்பை இழந்த டெல்லி , லக்னோ..!

IPL2024: லக்னோ அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை  இழந்து 189 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதனால் டெல்லி அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.…

10 hours ago

டெல்லி வருமான வரித்துறை அலுவலகத்தில் தீ விபத்து.! ஒருவர் உயிரிழப்பு.!

சென்னை : டெல்லி வருமானவரித்துறை அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். டெல்லியில் உள்ள வருமானவரித் துறை அலுவலகத்தில் சி.ஆர் கட்டிடத்தில் இன்று பிற்பகல் 3…

14 hours ago

சுப்மன் கில்லை நம்புங்க .. ஒரு கேப்டனா கண்டிப்பா திரும்ப வருவார் ! நம்பிக்கை அளிக்கும் மேத்யூ ஹைடன் !!

சென்னை : ஐபிஎல் தொடரின் குஜராத் அணியின் கேப்டனான சுப்மன் கில்லை அணியில் இருப்பவர்கள் நம்ப வேண்டும் என ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பேசிய போது கூறி இருந்தார்.…

15 hours ago

விஜய் கேட்ட பெரிய சம்பளம்? தளபதி 69 படமே வேண்டாம் என ஓடிய தயாரிப்பு நிறுவனம்!

சென்னை : தளபதி 69 படத்தில் நடிக்க விஜய் கேட்ட சம்பளத்தை கேட்டு ஆர்ஆர்ஆர் படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிர்ச்சியடைந்துள்ளது. நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு…

15 hours ago

இஸ்ரேல் தாக்குதல்.. முன்னாள் இந்திய ராணுவ வீரர் உயிரிழப்பு.!

சென்னை: ரஃபாவில் ஐக்கிய நாடுகள் சபையின் வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் முன்னாள் இந்திய ராணுவ அதிகாரி உயிரிழந்துள்ளார். ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புத் துறையில் பணிபுரியும் முன்னாள்…

15 hours ago