ஐபிஎல்2024: முதல் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 223 ரன்கள் எடுத்தனர்.
இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியும், கொல்கத்தா அணியும் மோதி வருகிறது. இந்த போட்டியானது கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் வந்து வீசி தேர்வு செய்தது. அதன்படி கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க வீரர்களாக பிலிப் சால்ட் , சுனில் நரேன் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கி 4-வது ஓவரிலே பிலிப் சால்ட் 10 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார் அடுத்து வந்த ரகுவன்ஷி தொடக்க வீரர் சுனில் நரேன் உடன் கூட்டணி அமைத்து அணியின் ரன்களை சற்று உயர்த்தினர்.
நிதானமாக விளையாடி வந்த ரகுவன்ஷி 18 பந்தில் 5 பவுண்டரி உட்பட மொத்தம் 30 ரன்கள் விளாசி அஸ்வினிடம் கேட்சை கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் வந்த வேகத்தில் 11 ரன்கள் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்த விக்கெட்டுக்கு ரசல் களமிறங்கினார்.
இதற்கிடையில் மறுமுனையில் விளையாடி வந்த சுனில் நரேன் சிறப்பாக விளையாடி 49-வது பந்தில் பவுண்டரி அடித்து சதம் விளாசினார். 4-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ரசல் சிக்ஸர் அடிக்க முயன்றபோது துருவ் ஜூரலிடம் கேட்சை கொடுத்து நடையை காட்டினார். அடுத்த 2-வது ஓவரிலே சதம் விளாசிய சுனில் நரேன் 109 ரன்கள் குவித்து போல்ட் ஆனார். அதில் 13 பவுண்டரி , 6 சிக்ஸர் அடங்கும்.
கடைசியில் இறங்கிய ரிங்கு சிங் 19-வது ஓவரில் தலா ஒரு சிக்ஸர் , பவுண்டரி விளாச அதே ஓவரின் கடைசி பந்தில் மற்றொரு வீரரான வெங்கடேஸ் ஐயர் ஒரு பவுண்டரி அடிக்க அந்த ஓவரில் மொத்தம் 16 ரன்கள் சேர்த்தனர். கடைசி ஓவரில் 2-வது பந்தில் வெங்கடேஸ் ஐயர் சிக்ஸர் அடிக்க முயன்றபோது விக்கெட்டை பறிகொடுத்தார்.
மறுமுனையில் விளையாடிய ரிங்கு சிங் 9 பந்தில் 20 * ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தார். இறுதியாக கொல்கத்தா அணி 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 223 ரன்கள் எடுத்தனர். ராஜஸ்தான் அணியில் அவேஷ் கான், குல்தீப் சென் தலா 2 விக்கெட்டையும், யுஸ்வேந்திர சாஹல், டிரென்ட் போல்ட் தலா 1 விக்கெட்டை பறித்தனர்.
IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ…
BCCI : டி20 உலகக்கோப்பைக்கான பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…
Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…
Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…
Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…