Connect with us

விட்டமின் பி 12 சத்து குறைபாட்டின் அறிகுறிகளை தெரிஞ்சுக்கோங்க ..!

b12 symptoms

ஆரோக்கியம்

விட்டமின் பி 12 சத்து குறைபாட்டின் அறிகுறிகளை தெரிஞ்சுக்கோங்க ..!

Vitamin B12-விட்டமின் பி 12 சத்து குறைபாட்டால் ஏற்படும் அறிகுறிகள் மற்றும் தீர்வுகளைப் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

வைட்டமின் பி 12;

விட்டமின் பி12 சத்து ரத்த சிவப்பு அணுக்களின் உற்பத்திக்கும் ,டி என் ஏ வின் செயல்பாட்டிற்கும் மிக அவசியமானது .இந்த பி12 சத்து 50 வயது அதிகமானவர்களுக்கும், செரிமான தொந்தரவு உள்ளவர்களுக்கும், இரைப்பை அறுவை சிகிச்சை செய்தவர்கள், சர்க்கரை நோயாளிகள் மற்றும் நெஞ்செரிச்சலுக்கு மருந்து உட்கொள்பவர்கள் ஆகியோருக்கு அதிகம் ஏற்படும்.

இந்த விட்டமின் பி12 சத்தை உடலால் இயற்கையாக உருவாக்க முடியாது .உணவின் மூலம் மட்டுமே கிடைக்கும். மேலும் சைவ உணவு பிரியர்களுக்கும் குறைவாகத்தான் கிடைக்கும். ஏனெனில் இது அசைவ உணவுகளில் மட்டுமே அதிகம் இருக்கும்.

இது ஒரு நீரில் கரையக்கூடிய விட்டமின் அதனால்  அதிகமாக எடுத்துக் கொண்டால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. ஆனால் குறைவாக எடுத்துக் கொள்ளும் போது சில பிரச்சனைகளையும் முன் அறிகுறிகளையும் ஏற்படுத்தும்.

விட்டமின் பி12 குறைபாட்டின் அறிகுறிகள்;

விட்டமின் பி12 குறைபாட்டால்  ரத்த சோகை ஏற்படும், இதனால் சருமம் மற்றும் கை ,நகம் போன்றவை அதிகம் வெண்மையாக வெளுத்து காணப்படும். பசியின்மை ,சோர்வு, எப்போதுமே தூங்க வேண்டும் என்ற உணர்வு ,நரம்பு மண்டலம் பாதிப்பு, கை, கால்கள் மரத்துப்போவது ,அரிப்பு ,

கால்களில் ஊசி குத்துவது போன்ற உணர்வு மற்றும் காலில் எறும்பு ஊறல்  உணர்வு, கண்பார்வை குறைபாடு, மூச்சு விடுவதில் சிரமம் ,நாக்கில் வெடிப்பு மற்றும் நாக்கு சிவந்து காணப்படுவது, உடலில் ஆங்காங்கே ரத்த சிவப்பணுக்கள் தேங்கி கருப்பு நிறத்தில் இருப்பது போன்ற அறிகுறிகள் ஏற்படும்.

உணவு முறை;

இந்த விட்டமின் பி12 குறைபாட்டை எளிதாகவே  உணவின் மூலம் சரி செய்து விட முடியும். அசைவ உணவுகளில் அதிகம் விட்டமின் பி12 உள்ளது.சிகப்பு  இறைச்சி ,மீன் ,முட்டை, கடல்பாசி ,இறால்,நண்டு ,  ஆட்டு ஈரல் போன்றவற்றில் அதிகம் உள்ளது.

சைவ உணவுகளான பால் ,பன்னீர் போன்ற பால் உணவுகள்  சோயா பால், சோயா ,பாதாம் பருப்பு ,காளான்,பழங்களில் ஆப்பிள் வாழைப்பழம் ஆரஞ்ச்  போன்ற உணவுகளிலும் உள்ளது.மேலும் மழை துளியிலும் வைட்டமின் பி 12 சத்து உள்ளது என கூறப்படுகிறது .

மிக குறைவான அளவில் இருந்தால் முதலில் மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்து  பிறகு உணவு முறைகளை பின்பற்றுங்கள் .

 

 

 

Continue Reading

More in ஆரோக்கியம்

To Top