கீர்த்தி சுரேஷின் “குட் லக் சகி” திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ்..?

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான ‘குட் லக் சகி’ திரைப்படம் ஒடிடி இணையத்தளத்தில் வெளியாவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சமீபத்தில் ஓடிடி இணையத்தளத்தில் வெளியான திரைப்படம் பென்குயின் இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் ஒரு சிறந்த வரவேற்பை பெற்றது , இந்த படத்தை தொடர்ந்து தெலுங்கில் இயக்குனர் நாகேஷ் குக்குனூர் இயக்கும் ‘குட் லக் சகி’ படத்தில் தற்பொழுது நடித்துள்ளார்.

இந்த ‘குட் லக் சகி’ திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் ஆதி பினிசெட்டி மற்றும் ஜகபதி பாபு நடிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

இந்த திரைப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஸ் வடமாநில பெண்ணாக நடித்துள்ள கீர்த்தி சுரேஷ் எப்படி துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் ஒலிம்பிக் நாயகியாக ஜொலிக்கிறார் என்பது தான் கதையாம். மேலும் இந்த திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது, இந்நிலையில் இந்த திரைப்படம் தற்பொழுது ஓடிடி இணையத்தளத்தில் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.