சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்.! என்ன படம் தெரியுமா.?

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் SarkaruVaariPaata படத்தில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்கவுள்ளதாககூறப்படுகிறது.

தெலுங்கு திரை உலகில் உச்ச நட்சத்திரமான நடிகர் மகேஷ் பாபு, தெலுங்கு மட்டுமில்லாமல் அனைத்து மொழிகளிலும் பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார். இவர் அடுத்ததாக நடிக்கவிருக்கும் திரைப்படம் ‘SarkaruVaariPaata’. தனது தந்தையான பிரபல நடிகரான கிருஷ்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தனது அடுத்த படத்தின் டைட்டிலை போஸ்ட்ரை வெளியிட்டிருந்ததார் இந்த படத்தை பரசுராம் இயக்கவுள்ளார். இவர் விஜய் தேவரகொண்டாவின் கீதா கோவிந்தம் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் எஸ். எஸ். தமன் இசையமைக்கும் இந்த படத்திற்கு பிஎஸ். வினோத் ஒளிப்பதிவு செய்கிறார். மேலு‌ம் இந்த படத்தை மகேஷ் பாபுவின் தயாரிப்பு நிறுவனமான GMB என்டர்டெயின்மெண்ட்டுடன் இணைந்து மைத்ரி மூவீ மேக்கர்ஸ் மற்றும் 14 ரீல்ஸ் ப்ளஸ் தயாரிக்கிறது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த தகவலை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களிடம் பேசுகையில் அவரது அடுத்த படம் தெலுங்கு சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபுவின் SarkaruVaariPaata என்ற படத்தில் என்று கூறியதாக தெரிகிறது. தற்போது கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பென்குயின்’ திரைப்படம் இன்று முதல் அமேசான் பிரேமில் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.மேலும் இவர் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்திலும் நடித்து வருகிறார். மகேஷ் பாபுவிடம் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.