4 மில்லியன் பார்வையாளர்களின் மனதை கொள்ளையடித்த 'காத்தோடு காத்தானேன்' பாடல் .!

ஜி. வி. பிரகாஷ் குமார் நடித்து இசையமைக்கும் ஜெயில் படத்தின் 'காத்தோடு

By ragi | Published: Jul 01, 2020 12:15 PM

ஜி. வி. பிரகாஷ் குமார் நடித்து இசையமைக்கும் ஜெயில் படத்தின் 'காத்தோடு காத்தானேன்' என்ற தனுஷ் மற்றும் அதிதி ராவ் ஹைத்ரி பாடிய பாடல் 4 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.

கிரிக்ஸ் சினி கிரியேஷன்ஸ் பேனரின் கீழ் ஸ்ரீதரன் மரியதாசன் தயாரிப்பில் வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ஜெயில். இந்த படத்தில் ஜிவி நடித்து இசையமைத்துள்ளார். மேலும் அபர்னாதி, ராதிகா சரத்குமார், யோகிபாபு, ரோபோ சங்கர், பிரேம்கி அமரன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

சமீபத்தில் கூட இந்த படத்திலுள்ள 'காத்தோடு காத்தானேன் ' என்ற   தனுஷ் மற்றும் அதிதி ராவ் ஹைத்ரி பாடியுள்ள பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.  பாடலுக்கு கபிலன் பாடல் வரிகளை எழுதியது குறிப்பிடத்தக்கது. கேட்க இனிமையாகவுள்ள இந்த பாடல்  சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகியது. பல இதயங்களை கொள்ளை கொண்ட இந்த பாடல் வெளியாகி தற்போது 4மில்லியனுக்கு மேல் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.

Step2: Place in ads Display sections

unicc