“காசிரங்கா தேசிய பூங்கா” அக்டோபர் 21 ஆம் தேதி திறப்பு.!

கொரோனா தொற்றுநோய் மற்றும் மழைக்காலம் காரணமாக அசாமில் உள்ள காசிரங்கா தேசிய பூங்கா மார்ச் 21 முதல் மூடப்பட்ட பின்னர் அக்டோபர் 21 முதல் மீண்டும் திறக்கப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுற்றுலாப் பருவத்திற்காக வருகின்ற அக்டோபர் 21 ஆம் தேதி காசிரங்கா தேசிய பூங்கா திறக்கப்படவுள்ளது. இந்த திறப்பு விழா காலை 11 மணி அளவில் தொடங்கப்படுகிறது. இந்த விழாவை அசாம் முதலமைச்சர் துவக்கிவைக்கவுள்ளார் என்று கே.என்.பி தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இந்த பூங்காவின் புகழ்பெற்ற காண்டாமிருகங்களுக்காக உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகள் அதிக எண்ணிக்கையில் வருகிறார்கள் எதிர்பார்க்கப்டுகிறது. இதற்கிடையில், இந்த பூங்காவை மொத்தம் 3,053 ஹெக்டேர் பரப்பளவில் விரிவாக்கம் செய்ய அசாம் அரசு ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.