Monday, June 3, 2024

ஐடி துறையில் கருணாநிதி புரட்சி செய்தார்.. தகவல் தொழில்நுட்ப கருத்தரங்கில் முதல்வர் உரை!

தகவல் தொழில்நுட்ப துறையில் கருணாநிதி பெரும் புரட்சியை ஏற்படுத்தினார் என பிரிட்ஜ் கருத்தரங்கில் முதலமைச்சர் உரை.

சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற பிரிட்ஜ் கருத்தரங்கில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இளைய தலைமுறை தகவல் தொழில்நுட்பத்தை ஆக்கபூர்வமான வகையில் செயல்படுத்த வேண்டும். தொழில்நுட்பம் உலகை ஒரு குடையின் கீழ் கொண்டுவந்துள்ளது  என்றும் தகவல் தொழில்நுட்ப துறையில் கருணாநிதி பெரும் புரட்சியை ஏற்படுத்தினார் எனவும் தெரிவித்தார்.

1996-2001-ஆம் ஆண்டு ஆட்சியில் தகவல் தொழில்நுட்பத்துறை என தனித்துறை உருவாக்கப்பட்டது. ஆசியாவிலேயே பெரிய டைடல் பார்க்கை உருவாக்கி பெருமை சேர்த்தது கலைஞர் கருணாநிதியின் தொலைநோக்கு பார்வை. தகவல் தொழில்நுட்ப கொள்கையை முதலில் உருவாக்கியது திமுக அரசுதான். தனி மனித பாதுகாப்பை உறுதி செய்ய தொழில்நுட்ப  இன்றியமையாதது.

தகவல் தொழில்நுட்பங்களை மக்கள் பயன்படுத்த வேண்டுமே தவிர அதற்கு அடிமையாகிவிட கூடாது. தொழில்நுட்ப வளர்ச்சியால் கல்வி அறிவு விரல் நுனியில் வந்துவிட்டது. ஆன்லைன் ரம்மி விளையாட்டு மனித உயிர்களை பலிவாங்குகிறது. ஐ.டி பணியாளர்கள் தமிழ்நாட்டில் அதிகளவில் வளர காரணம் திமுக அரசு தான் எனவும் முதலமைச்சர் முக ஸ்டாலின் உரையாற்றினார்.

RELATED ARTICLES