நாளை முதல் கர்ணனின் மிரட்டல் ஆரம்பம்..! தனுஷ் ட்வீட்..!!

தனுஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில் கர்ணன் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார். 

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன். இந்த திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனால் தனுஷ் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துள்ளார். படத்தில் இருந்து பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகின்ற நிலையில், தற்போது நடிகர் தனுஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில் நாளை கர்ணன் படம் வெளியாகவுள்ளது என்பதை குறிப்பிட்டு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த கர்ணன் திரைப்படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரித்துள்ள இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார்.

 

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.