'ஆர்டிகிள் 15' ரீமேக்கில் கனா பட இயக்குநர்.! உறுதியான தகவல்.!

இந்தி மெகா ஹிட் படமான ஆர்டிகிள் 15 படத்தின் தமிழ் ரீமேக்கில் அருண்ராஜா காமராஜ்

By ragi | Published: Jun 01, 2020 02:28 PM

இந்தி மெகா ஹிட் படமான ஆர்டிகிள் 15 படத்தின் தமிழ் ரீமேக்கில் அருண்ராஜா காமராஜ் இயக்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாடகர் மற்றும் நடிகராக அறிமுகமானவர் அருண்ராஜா காமராஜ். ரஜினியின் ஹிட் பாடலான நெருப்புடா பாடலின் மூலம் பிரபலமானவர். அதனையடுத்து சமீபத்தில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான கனா படத்தின் மூலம் இயக்குனரானார் அருண்ராஜா காமராஜ். இந்த படத்திற்காக பல விருதுகளை வென்றார். அதனையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகவிருக்கும் மாஸ்டர் திரைப்படத்தில் ஒரு ஹிட் பாடலை எழுதியுள்ளார். ஆம், விஜய் பாடிய ஒரு குட்டி ஸ்டோரி பாடலை எழுதியவர் அருண்ராஜா காமராஜ்.

சமீபத்தில் இந்தி மெகா ஹிட் படமான 'ஆர்டிகிள் 15' படத்தினை தமிழில் ரீமேக் செய்வதாகவும், அதன் ரீமேக் உரிமையை போனி கபூர் வாங்கி தயாரிக்க இருப்பதாகவும், மேலும் இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும் சில தகவல்கள் வெளியாகியிருந்தது. ஆனால் இதனை குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை. இந்த நிலையில் தற்போது ரசிகர் ஒருவர் ஆர்டிகிள் 15 படத்தின் தமிழ் ரீமேக்கில் இயக்குகிறீர்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அவர், தயாரிப்பாளர் தரப்பிலிருந்து தான் இது தொடர்பான அறிவிப்பு எல்லாம் வெளிவர வேண்டும் என்று கூறியுள்ளார். இதிலிருந்து இவர் ஆர்டிகிள் 15 ரீமேக்கை இயக்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியில் அனுபவ் சின்ஹா இயக்கி தயாரித்த இந்த படத்தில் ஆயுஷ்மான் குரானா, நாசர், இஷா தல்வார் உள்ளிட்ட பலர் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Step2: Place in ads Display sections

unicc