ஜகமே தந்திரம் மூன்றாவது பாடலுக்கான அப்டேட்..!!

ஜகமே தந்திரம் திரைப்படத்தின் மூன்றாவது பாடலுக்கான அப்டேட் அடுத்த வாரம் வெளியாகவுள்ளதாக தகவல்.

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். இந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்துள்ளார். கடந்த ஆண்டு மே 1 ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி சென்றது அதற்கு பிறகு இந்த திரைப்படம் “நெட்பிளிக்ஸ்” ஓடிடி தளத்தில் வெளியீட முடிவு செய்தனர். அதன் படி வருகின்ற ஜூன் மாதம் 18 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.

இந்த நிலையில் தற்போது ஜகமே தந்திரம் படம் குறித்த வீடியோ ஒன்று இந்த வாரம் வெளியாகவுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. அது என்னவென்றால் ஜகமே தந்திரம் திரைப்படத்தின் மூன்றாவது பாடலுக்கான அப்டேட் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் தனுஷ் ரசிகர்கள் தற்போது உற்சாகத்தில் உள்ளார்கள். மேலும் ஜகமே தந்திரம் திரைப்படம் 17 மொழிகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.