பிளாக்பஸ்டர் தான்…’கஸ்டடி’ திரைப்படம் எப்படி இருக்கு..? டிவிட்டர் விமர்சனம் இதோ.!!

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் நாக சைதன்யா, அரவிந்த் சாமி, கீர்த்தி ஷெட்டி, பிரியாமணி, சரத்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று தமிழ், தெலுங்கு, ஆகிய மொழிகளிலில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘கஸ்டடி’.

Custody in Theatres
Custody in Theatres Image TwitterChrissuccess

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர்கள் இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளார்கள். பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று வெளியான இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது.

Custody
Custody Image TwitterCinemaWithAB

படத்தை பார்த்த பலரும் படம் சூப்பராக இருப்பதாக கருத்துக்களை கூறி வருகிறார்கள். இந்நிலையில், படத்தை பார்த்துவிட்டு டிவிட்டரில் நெட்டிசன்கள் தெரிவித்துள்ள விமர்சனத்தை பற்றி பார்க்கலாம்.

படத்தை பார்த்த ஒருவர் ” கஸ்டடி  படம் முதல் பாதி சூப்பர், 2வது பாதி மாத்திரம்
திரைக்கதை  மற்றும் பின்னணி இசை அருமையாக இருந்தது. நாக சைதன்யா நடிப்பு நன்றாக இருந்தது மொத்தத்தில் படம்  பிளாக்பஸ்டர்” என பதிவிட்டுள்ளார்.

மற்றோருவர் ” கஸ்டடி படம் அருமையாக இருக்கிறது. வெங்கட் பிரபுவுக்கு மற்றோரு வெற்றிப்படம். நாக சைதன்யா நடிப்பு அதிர வைத்தது. அரவிந்த் சாமி, சரத்குமார் ஆகியோர் நடித்தது மிகவும் சக்தி வாய்ந்த பாத்திரங்கள். இளையராஜா – யுவன் பின்னணி இசை அருமை” என பதிவிட்டு 3.5/5 ரேட்டிங் கொடுத்துள்ளார்.

மற்றோருவர் ” படம் வேற லெவல்..கண்டிப்பாக எல்லா இடங்களில் பிளாக்பஸ்டர் தான்” என பதிவிட்டுள்ளார்.

படத்தை பார்த்த மற்றோருவர் ” சிறப்பாக வடிவமைக்கப்பட்ட சில காட்சிகளுடன் கூடிய சுவாரசியமான கதைக்களம் வேலை செய்யும் ஆனால் மீதமுள்ளவை சோர்வாக இருக்கிறது. திரைப்படம் பல இடங்களில் திரும்பத் திரும்ப வரும் ஆக்‌ஷன் காட்சிகளுடன் இழுத்துச் செல்லப்பட்டு தட்டையான முறையில் விவரிக்கப்பட்டுள்ளது. பின்னணி இசை ஓகே ஆனால் பாடல்கள் அருமை.மொத்தத்தில் கஸ்டடி ஒரு பிலோ பார் ஆக்ஷன் த்ரில்லர்” என பதிவிட்டுள்ளார்.

மற்றோருவர் ” கஸ்டடி மிக அருமையான ப்ரீ க்ளைமாக்ஸ் மற்றும் க்ளைமாக்ஸுடன் இரண்டாம் பாதி… சராசரிக்கும் குறைவான விஷயங்கள்… அரவிந்த் சாமி மற்றும் பிஜிஎம் ப்ளஸ்… நல்ல கதை வசனம் தேவையற்ற காட்சிகள் மற்றும் ஃப்ளாஷ்பேக் மூலம் வீணடிக்கப்பட்டது…” என பதிவிட்டுள்ளார்.


படத்தை பார்த்த மற்றோருவர் ” கஸ்டடி படத்தின் ப்ரீ க்ளைமாக்ஸ் நன்றாக இருக்கிறது. ஒரு கண்ணியமான க்ளைமாக்ஸ். 4-5 காட்சிகள் நன்றாகவும் சிறப்பாகவும் எழுதப்பட்டுள்ளன. மீதமுள்ளவை மிகவும் சாதாரணமானவை.
பாடல்கள் பெரிய மைனஸ். பின்னணி சரியாக உள்ளது (முதல் 40 நிமிடம் தவிர)” என பதிவிட்டுள்ளார்.

விமர்சனத்தை வைத்து பார்க்கையில் படம் கண்டிப்பாக வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றிபெறும் என தெரிகிறது. எனவே, மாநாடு படத்தை தொடர்ந்து இந்த படமும் வெங்கட்பிரபுவுக்கு வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.