ஐஎஸ்எல் கால்பந்து: கேரளாவை வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றி.!

  • ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டரை வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றி பெற்றது.
  • 8-வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணிக்கு இது 2-வது வெற்றியாகும்.

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் 10 அணிகள் இடையிலான 6-வது சீசன் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு சென்னை நேரு ஸ்டேடியத்தில் அரங்கேறிய 42-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, கேரளா பிளாஸ்டர்சை எதிர்கொண்டது. இந்த பரபரப்பான ஆட்டத்தில் 4-வது நிமிடத்தில் சென்னை வீரர் ஸ்கெம்ப்ரி கோல் அடித்து உள்ளூர் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். பின்னர் 15-வது நிமிடத்தில் கேரளா கேப்டன் ஒக்பீச்சே ‘பிரீகிக்’ பதிலடி கொடுக்குமாறு கோல் போட்டு ஆட்டத்தை சமனுக்கு கொண்டு வந்தார்.

மேலும் சில வினாடி பந்தை கடத்திச் சென்ற சென்னை வீரர் வல்ஸ்கிஸ் மற்றோரு கோல் அடித்தார். அது கோல் இல்லை என்று நடுவர் அறிவித்தார். இதனால் அதிர்ச்சிக்குள்ளான சென்னை வீரர்கள், அணியின் பயிற்சியாளர், ஆப்-சைடு நடுவரிடம் முற்றுகையிட்டனர்.  ஆனால் எதையும் நடுவர் கண்டுகொள்ளவில்லை ஆட்டம் தொடர்ந்து நடந்தது.

இந்நிலையில், 30-வது நிமிடத்தில் லாவகமாக கோல் அடித்து பதிலடி கொடுத்தார். உள்ளூர் ரசிகர்களின் ஆர்ப்பரிப்பால் அரங்கமே அதிர்ந்தது. தொடர்ந்து 40-வது நிமிடத்தில் சென்னை வீரர் வல்ஸ்கிஸ் மேலும் ஒரு கோலை போட்டு, கேரளாவை நிலைகுலையச் செய்தார். இதனால் முதல்பாதியில் 3-1 என்ற கோல் கணக்கில் சென்னை அணி வலுவான முன்னிலை பெற்றது. இரண்டாவது பத்தியில் இரு அணிகளும் கோல் போடாததால், முடிவில் சென்னையின் எப்.சி அணி 3-1 என்ற கோல் கணக்கில் கேரளாவை தோற்கடித்தது. 8-வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணிக்கு இது 2-வது வெற்றியாகும். இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி, 9 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Recent Posts

எதுக்கு அவுங்க டீம்ல இல்ல? பிசிசிஐக்கு கேள்வி எழுப்பும் ரசிகர்கள் !

BCCI : டி20 உலகக்கோப்பைக்கான  பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…

1 hour ago

தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும்… நெதன்யாகு திட்டவட்டம்.!

Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…

2 hours ago

ஐயோ பிரிச்சு பேசாதீங்க! குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து!

Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…

2 hours ago

உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் முதல் முறையாக துபே, சாம்சன்!

T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…

2 hours ago

பரவும் பறவை காய்ச்சல்… கண்காணிக்கும் மத்திய சுகாதாரத்துறை.!

Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…

2 hours ago

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு!

Nirmala Devi: கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் நிர்மலா தேவிக்க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டு விருதுநகர் மாவட்டம்…

2 hours ago