காங்கிரஸ் தலைவர்கள் குறித்து ராகுல் காந்தி கூறியது உண்மையா? செய்தித்தொடர்பாளர் விளக்கம்

காங்கிரஸ் தலைவர்கள் குறித்து ராகுல்காந்தி  குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதனையடுத்து காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டார்.

ஆனால் கட்சிக்கு நிரந்தர தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை கட்சிக்குள் எழுந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக காங்கிரஸ் கட்சியில் தலைமை முதல் கீழ்மட்டம் வரை ஒட்டு மொத்தமாக புதுப்பிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மூத்த தலைவர்கள் அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினர்.

இதனிடையே இன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம் காணொளி காட்சி மூலமாக நடைபெற்றது. இந்த ஆலோசனையில் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். தலைமை மாற்றம் வேண்டும் என கடிதம் எழுதிய காங்கிரஸ் தலைவர்கள் பின்னணியில் பாஜக உள்ளது என்று ராகுல் காந்தி கூறியதாக கூறப்பட்டது. இதனால், ராகுலின் குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தாகவும் செய்திகள் வெளியானது.

இதைதொடர்ந்து, கடிதம் எழுதியதற்காகவே பாஜகவுடன் தொடர்பு என குற்றம்சாட்டுவதா..? 30 ஆண்டுகளாக பாஜகவுக்கு ஆதரவாக ஒரு அறிக்கை கூட வெளியிட்டது கிடையாது என கபில் சிபில்  தனது ட்விட்டரில் பதிவை பதிவிட்டார். இதற்கிடையில், குலாம் நபி ஆசாத் “ராகுல் காந்தி தனது கூற்றை நிரூபித்தால் நிரூபித்தால் பதவி விலக தயார்” என்று பதிவில் தெரிவித்தார்.

எனவே காங்கிரஸ் செய்திதொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,ராகுல்காந்தி இதுபோன்ற குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை . ஊடகங்கள் மூலம் தவறான தகவல் பரப்பப்படுகிறது. மோடி ஆட்சியை எதிர்த்து போராடுவதில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும், மாறாக ஒருவருக்கொருவர் போட்டியிட்டுக் கொள்ளக் கூடாது என்று கூறியதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பின்னர்  ராகுல் காந்தி விளக்கம் அளித்ததை தொடர்ந்து தொடர் தனது ட்விட்டரில் பதிவிட்ட பதிவை  கபில் சிபில் நீக்கினார்.இதன் பின் ராகுல்காந்தி இதுபோன்ற கருத்தை கூறவில்லை என தனிப்பட்ட முறையில் விளக்கமளித்துள்ளார். அதனால் எனது ட்விட்டர் பதிவை திரும்ப பெற்றுக் கொள்வதாக கபில் சிபில் தெரிவித்தார்.

Recent Posts

பை பை ஐபிஎல் ..! இறுதி போட்டிக்கு முன் நியூயார்க் பறக்கும் இந்திய அணி வீரர்கள் !!

சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…

1 hour ago

கனமழை எதிரொலி: சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள்!

சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…

1 hour ago

நாங்கள் பாஜக அலுவலகம் வருகிறோம்… கைது செய்துகொள்ளுங்கள்… கெஜ்ரிவால் பரபரப்பு.!

சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான…

2 hours ago

10.57 வர டைம் இருக்கு .. மழை பெய்யுமா? பெய்தால் எப்படி ஓவர் குறைப்பாங்கனு தெரியுமா ?

சென்னை : இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் மழை வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், ஒருவேளை மழை குறுக்கிட்டால் ஐபிஎல் போட்டிகளில் ஓவர்கள் எப்படி குறைக்கிறார்கள்…

2 hours ago

மனித மூளையில் நியூராலிங்க் சிப்… மிக பெரிய முன்னேற்றம்.! மஸ்க் அறிவிப்பு.!

சென்னை: நியுராலிங்க் நிறுவனம் உருவாக்கிய டெலிபதி சிப் முன்னேற்றம் கண்டுள்ளது என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், எக்ஸ் சமூக வலைதள பக்க நிறுவனத்தின்…

3 hours ago

இது ரொம்ப முக்கியம் கண்ணா! பயோபிக் படத்திற்கு இளையராஜா போட்ட முக்கிய கண்டிஷன்?

சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா தனது பயோபிக் படத்திற்கு கண்டிஷன் போட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படத்தை கேப்டன் மில்லர், ராக்கி…

3 hours ago