ஐபிஎல் இறுதிப்போட்டி திட்டமிட்ட நாடகமா? – சுப்பிரமணியன் சுவாமி குற்றசாட்டு!

ஐபிஎல் இறுதிப்போட்டியின் முடிவு மோசடியாக மாற்றப்பட்டதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி குற்றசாட்டு.

நடப்பாண்டு ஐபிஎல் தொடர் கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இறுதிப்போட்டியில் மோசடி நடைபெற்று இருப்பதாக சர்ச்சைகள் கிளப்பியுள்ளது. டாடா ஐபிஎல் 15வது சீசனில் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இசை நிகழ்ச்சிகளுடன் பிரமாண்டமாக நடைபெற்றது. ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற இறுதிப்போட்டியை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் அவருடைய மனைவி உள்ளிட்ட பல பிரபலங்கள் நேரில் கண்டு ரசித்தனர்.

இந்த போட்டியில், ராஜஸ்தான் அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. நடப்பு ஐபிஎல் தொடரில் அறிமுக அணியாக களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி ஆரம்ப முதலே சிறப்பாக விளையாடி புள்ளி பட்டியலில் முதலிடத்திலே ஆதிக்கம் செலுத்தியது. இந்த அணியை திறம்பட வழிநடத்திய கேப்டன் ஹர்திக் பாண்டியா, சாம்பியன் பட்டத்தையும் பெற்று தந்தார்.

இருப்பினும், ஐபிஎல் போட்டியில் மோசடி நடைபெற்று இருப்பதாகவும், இறுதிப் போட்டியில் குஜராத் அணிக்குதான் சாம்பியன் பட்டம் என்று ஏற்கனவே நிர்ணயம் செய்யப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பேச்சுக்கள் பரவலாக பேசப்பட்டு வந்தன. இறுதிப்போட்டியின்போது ட்விட்டர் பக்கத்தில் fixing என்ற ஹேஸ்டேக்கும் ட்ரண்ட் செய்யப்பட்டு வந்தது. இதனால் பலருக்கும் பல கேள்விகள் எழ தொங்கின.

அந்தவகையில் இதனை மேலும் உறுதி செய்யும் வகையில், ஐபிஎல் இறுதிப்போட்டியின் முடிவு மோசடியாக மாற்றப்பட்டதாக பாஜகவை சேர்ந்த மூத்த சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் குற்றசாட்டியுள்ளார். அவரது பதிவில், டாடா ஐபிஎல் கிரிக்கெட் முடிவுகள் மோசடி செய்யப்பட்டதாக புலனாய்வு அமைப்புகளிடம் பரவலான சந்தேக கருத்துக்கள் உள்ளது. இதை தெளிவுபடுத்த விசாரணை தேவை என்பதால் பொதுநல வழக்கு தொடர வேண்டும்.

மேலும், பிசிசிஐயின் அறிவிக்கப்படாத சர்வாதிகாரியாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய்ஷா இருப்பதால், அரசு இதுதொடர்பாக வழக்கு தொடராது மற்றும் விசாரணை நடத்தாது. இதனால், ஐபிஎல் இறுதிப்போட்டியின் முடிவு மோசடியாக மாற்றப்பட்டதாக என்பதை தெளிவுபடுத்த பொதுநல வழக்குத் தாக்கல் செய்வது அவசியமானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment