புஷ்பா 2 படத்தில் சாய்பல்லவி….அதுவும் இந்த மாதிரி ஒரு கதாபாத்திரமா..?

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான பாண் இந்திய திரைப்படமான புஷ்பா ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக 350 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இயக்குனர் சுகுமார் இயக்கிய இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா நடித்திருந்தார். பஹத் பாசில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

pushpa 2 vijay sethupathi

படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகமும்  விறு விறுப்பாக தொடங்கப்பட்டு படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் அடிக்கடி படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் குறித்த தகவலும் பரவுவது வழக்கமான ஒன்று. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக தகவல்கள் வெளியானது.

pushpa 2 sai pallavi

இதனை தொடர்ந்து தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், இந்த படத்தில் பிரபல நடிகையான சாய் பல்லவி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம். படத்தில் பழங்குடியின பெண்ணாக அவர் நடிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.

இதையும் படியுங்களேன்- மருத்துவமனையில் இருக்கும் பாரதிராஜாவுக்கு திருமணம் செய்து வைக்க துடிக்கும் இசைஞானி.!

sai pallavi

படத்தின் கதையில் அவரது கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று கூறப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘ஷ்யாம் சிங்கா ராய்’, ‘கார்கி’ என தொடர்ச்சியாக அருமையான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் சாய் பல்லவிக்கு இந்த கதாபாத்திரமும் பேசப்படுவதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment