சாப்பிடும்போது தண்ணீர் குடிப்பது சரியா? தவறா? மருத்துவ குறிப்புகள் கூறும் பயனுள்ள தகவல்கள்…

0
194
EAT drinking water
EAT drinking water [Image source: file image ]

ஒவ்வொரு நாளும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இன்றியமையாதது. தண்ணீர் குடிப்பதால் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றுவது, உமிழ்நீரை உருவாக்குவது மற்றும் உடலின் பல்வேறு பகுதிகளுக்கு ஊட்டச்சத்துக்களை கொண்டு செல்வது போன்ற முக்கியமான உடல் செயல்பாடுகளுக்கும் உதவுகிறது.

water
water [Image source : Healthifyme]

ஆனால், உணவு உட்கொள்ளும் போது தண்ணீர் குடிப்பது நல்லதா? அல்லது சாப்பிட்டு முடித்த பிறகு குடிப்பது நல்லதா? என்பது உங்களுக்குத் தெரியுமா? சிலர் உணவுக்குப் பிறகு தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கூறினாலும், மற்றவர்கள் உணவு உண்பதற்கு முன் குடிக்க பரிந்துரைக்கின்றனர்.

drinking water
drinking water [Image source : Nutritious Life]

உணவு உண்ணும் போது ஏன் தண்ணீர் குடிக்கக் கூடாது.?

சாப்பாட்டுக்கு பிறகு அல்லது இடையில் தண்ணீர் குடிக்கும் பழக்கம் பலருக்கு உள்ளது. இந்த காரணத்திற்காக, உணவுடன் ஒரு கிளாஸ் தண்ணீரும் வைத்து கொள்வர். ஆனால் இது ஆயுர்வேதத்தில், ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று கூறப்படுகிறது.

உணவுடன் தண்ணீர் குடிப்பதால் செரிமான மண்டலம் பலவீனமடைகிறது. இதன் காரணமாக, வாயு, நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளும் தொடங்குகின்றன. உணவுடன் தண்ணீர் குடிப்பதால், உணவில் உள்ள சத்துக்கள் தண்ணீரில் கரைந்து சிறுநீருடன் வெளியேறும். இதன் காரணமாக, உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல், நோய் எதிர்ப்புச் சக்தியையும் பாதிக்கிறது.

உணவு உண்ணும் போது வயிற்றில், இரைப்பை ஜீரணிக்கும் வேலையைச் செய்கிறது. உணவு உண்ணும் போதோ அல்லது உணவு உண்ட உடனேயோ தண்ணீர் குடித்தால் இரைப்பை வேலையை குறைந்து விடுமாம். இதன் காரணமாக உணவு சரியாக ஜீரணமாகாது.

EAT drinking water
EAT drinking water [Image source: file image ]

சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடிக்கலாமா.?

உணவு உண்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன் தண்ணீர் குடித்தால், பசியின்மை ஓரளவு குறைந்து, தேவைக்கு அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்க்கிறது. இதனால், உணவு உண்பதற்கு முன்பு தண்ணீர் குடிப்பதை தவிர்க்கலாம்.

ஆயுர்வேதத்தின் படி, சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடிப்பது உடல் பலவீனமடைகிறதாம். அதே நேரத்தில், சாப்பிட்டு அரை மணி நேரம் கழித்து தண்ணீர் குடிப்பது நல்லது என்று கருதப்படுகிறது.

EAT drinking water
EAT drinking water [Representative Image]
சாப்பிடும் போது தண்ணீர் அவசியமா?

உணவின் சாப்பிடும் போது அல்லது அதற்குப் பிறகு தண்ணீர் குடிப்பது உண்ணும் உணவை உடைத்து, உணவை பதப்படுத்தி, உணவை ஜீரணிக்க உதவுகிறது. உண்மையில், குடிநீரில் உணவு உடைந்தால், உடலின் ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்படும். இதனால், உணவு அருந்தும் போது, ஒரு டம்ளர் தண்ணீரை வைத்துக்கொண்டு, தேவைப்பட்டால் சிறிது  சிறிது குடிக்கலாம்.

drinking water
drinking water [Image source : BBC]

உடலில் தண்ணீர் செய்யும் வேலை:

உடலில் 70 சதவிகிதம் நீர் உள்ளது, இது உடல் திரவம் என்று அழைக்கப்படுகிறது. உடலில் இருக்கும் இந்த திரவம் உடல் வெப்பநிலையை ஒழுங்குபடுத்துகிறது, உமிழ்நீரை உருவாக்குகிறது, உணவில் இருந்து ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச உதவுகிறது.