இரட்டை வேடங்களில் நடித்து அசத்திய விக்ரமின் ‘இருமுகன்’ ரீமேக் ஆகிறதா.?

விக்ரம் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற இருமுகன திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் விக்ரம் மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகி வெற்றி பெற்ற திரைப்படம் இருமுகன் . ஆனந்த் சங்கர் இயக்கிய இந்த படத்தில் விக்ரம் வில்லன் மற்றும் ஹீரோ என்ற இரு வேடங்களில் நடித்து அசத்தியிருப்பார் .தம்பி ராமையா,நித்யா மேனன் உள்ளிட்ட பலர் நடித்த இந்த திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க சிபுதமீன்ஸ் தயாரித்திருந்தார்.

தற்போது இந்த திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .இந்தி ரீமேக்கையும் ஆனந்த் சங்கர் இயக்குவாரா அல்லது வேறு யாராவது இயக்குகிறாரா என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும், மேலும் இந்த படத்தில் நடிக்கும் பிற நடிகர் நடிகைகள் குறித்த விவரங்களும் விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது . தற்போது ஆனந்த் சங்கர் எனிமி எனும் படத்தினை இயக்கி வருவதும் ,அதில் விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.