வாட்ஸ் அப்பில் புதிய அம்சம் அறிமுகம்! வீடியோ காலில் 32 பேர் வரை இணையலாம்.!

வாட்ஸ் அப்பில் வாய்ஸ் காலில் 32 பேர் வரை பேசப்பட்டு வந்த நிலையில் இனி வீடியோ காலிலும் 32 பேர் வரை பேச முடியும்.

மெட்டா நிறுவனத்தின் முக்கிய செயலியான வாட்ஸ் அப், உலகெங்கும் பல பயனர்கள் உபயோகப்படுத்தும் ஒரு செயலியாக இருக்கிறது. இந்த மெட்டா நிறுவனம் அவ்வப்போது பல அப்டேட்களை வெளியிட்டு பயனர்களை எப்போதும் குதூகலப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் வாட்ஸ்அப் இன்று மேலும் ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்துகிறது. வாய்ஸ் காலில் 32 பேர் வரை இணையலாம் என்று சில வாரங்களுக்கு முன் ஒரு அப்டேட், மெட்டா நிறுவனத்தால் வெளியிடப்பட்ட நிலையில் தற்போது வீடியோ காலிலும் 32 பேர் வரை இணைக்கும் புது அம்சத்தை அறிமுகப்படுத்துகிறது.

மேலும் புதிய வாட்ஸ்அப் இன்-சேட் வாக்கெடுப்புகள் மற்றும் வாட்ஸ்அப் குழுவில் 512 உறுப்பினர்கள் வரை அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த புதிய அப்டேட்டில் 1024 உறுப்பினர்கள் வரை இணையலாம்  என்று மெட்டா நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான மார்க் ஜுக்கர்பெர்க் கூறினார்.

author avatar
Muthu Kumar

Leave a Comment