,
yoga

சர்வதேச யோகா தினம்- யோகாவின் நன்மைகள்.. மன அழுத்தம் முதல் உடல் ஆரோக்கியம் வரை..

By

சர்வதேச யோகா தினம் -சர்வதேச யோகா தினத்தின் சிறப்புகள் , யோகாவின் நோக்கம் மற்றும் நன்மைகள் பற்றி இங்கே காணலாம்.

சர்வதேச யோகா தினம் சிறப்புகள்;

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினம்  கொண்டாடப்படுகிறது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஐநா பொது சபையில் 2014ஆம் ஆண்டு செப்டம்பர் 27 அன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி உரையாற்றினார்.

மேலும் ஜூன் 21ம் தேதியை  அதற்காக பரிந்துரையும் செய்தார். 2014ஆம் ஆண்டு டிசம்பர் 11 அன்று 193 உறுப்பினர்கள் கொண்ட ஐநா சபையானது  ஜூன் 21ம் தேதியை  பன்னாட்டு யோகா தினமாக கொண்டாடலாம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முதல்முறையாக 2015, ஜூன் 21 அன்று டெல்லியில் பிரம்மாண்டமான  ஏற்பாடுகளுடன் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஜூன் 21 நாளானது வடக்கு அறைக்கோளத்தின் மிக நீண்ட நாளாக உள்ளது.

யோகக் கலையின் நோக்கமும் வரலாறும்;

யோகா என்பது உடல் ,மனம், அறிவு மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கு உதவும் கலையாகும் .யோகா வேதகாலத்திற்கு முன்பே தோன்றி இருக்கலாம் என ஆராய்ச்சிகள் கூறுகிறது . ஆனால் யோகக் கலை பதஞ்சலி முனிவரால் இந்தியாவில் தோற்றுவிக்கப்பட்டது.

பின்பு புத்தர் காலத்தில் அதிகமாக பரவாலாயிற்று ,இதனைத் தொடர்ந்து விவேகானந்தர் போன்ற அறிஞர்களால் அதிகம் பிரசங்கம் செய்யப்பட்டு வெளிநாடுகளிலும் பரவத் துவங்கியது. இது உலகம் முழுவதும் அறிந்த உடற்பயிற்சியாகவும் உள்ளது.

மேலும் யோகா உடலையும் உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள கூடிய ஒரு ஒழுக்க நெறியாகவும் உள்ளது. தற்போது பிரபலங்கள் முதல் சினிமா நட்சத்திரங்கள் வரை யோகா அதிகம் செய்யப்பட்டு வருகிறது.

யோகாவின் நன்மைகள்;

உடல், மனம், ஆன்மா இவற்றை ஒன்றோடு ஒன்று இணைக்க யோகா உருவாக்கப்பட்டது. வாழ்க்கையில் சில சமயங்களில் மன அழுத்தம் ஏற்படும் . இதனால் உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது.

முதுகு வலி ,கழுத்து வலி, பதட்டம், தலைவலி, மனச்சோர்வு போன்றவற்றிற்காகவே பல யோகா உள்ளது .இதனை செய்தால் நல்ல தீர்வும் கிடைக்கிறது. தினமும் யோகா செய்வதன் மூலம் மன தெளிவு, அமைதி, சுறுசுறுப்பு போன்றவற்றை உருவாக்கும். மன அழுத்தம் நீக்கப்படுகிறது.

முதுகு தண்டு உறுதியாகப்படுகிறது, சீரான வளர்ச்சிதை மாற்றத்தை பராமரிக்கவும் உதவுகிறது, குறிப்பாக கோபத்தை குறைக்கக்கூடியது, முதுமையை தள்ளிப் போடக் கூடியதும் கூட.. இப்படி ஏராளமான நன்மைகளைக் கொண்ட யோக பயிற்சியை நம் அனைவரும் பின்பற்றி வாழ்வில் ஒழுக்கத்தையும் ஆரோக்கியத்தையும் பெற்று மகிழ்ச்சியாக வாழ்வோம்.

Dinasuvadu Media @2023