2023-ல் அதிகம் டெலிட் செய்யப்பட்ட ஆப்ஸ் பட்டியல்! முதலிடம் பிடித்த இன்ஸ்டாகிராம்!

2023 ஆம் ஆண்டு முடிவடைய இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இந்த வருடத்தின் பல வகையான புள்ளி விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி கொண்டு இருக்கிறது. குறிப்பாக அதிகம் கூகுளில் தேடப்பட்ட விஷயங்கள் பற்றி அதிகம் வசூல் செய்த படங்கள் பற்றி என பல புள்ளி விவரங்கள் குறித்த தகவல் வெளியாகி கொன்டு இருக்கிறது.

அந்த வகையில், இந்த 2023 ஆம் ஆண்டில் அதிகம் டெலிட் செய்யப்பட்ட ஆப்ஸ் (செயலி) குறித்த பட்டியலும் வெளிவந்துள்ளது. அமெரிக்காவின் TRG Datacenter வெளியிட்டுள்ள பட்டியலின் படி இந்த ஆண்டு அதிகம் டெலிட் செய்யப்பட்ட ஆப்ஸ் பட்டியலில் இன்ஸ்டாகிராம் முதலிடம் பிடித்துள்ளது. இந்த ஆண்டு ஒவ்வொரு மாதமும் ‘இன்ஸ்டாகிராம் கணக்கை எப்படி நீக்குவது’ என 1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தேடி உள்ளனர்.

இந்த ஆண்டின் சிறந்த டாப் 5 ஸ்மார்ட்போன்கள்!

எனவே, இந்த ஆண்டு அதிகம் டெலிட் செய்யபட்ட ஆப்ஸ் பட்டியலில் இன்ஸ்டாகிராம் முதலிடம் பிடித்துள்ளது. அந்த பட்டியலில் சினாப்சாட் , டெலிகிராம், பேஸ்புக், ட்விட்டர், யூடியூப், வாட்ஸ்அப் ஆகிய ஆப்ஸ்களும் இடம்பெற்றுள்ளது.

2023ல் அதிகம் டெலிட் செய்யப்பட்ட ஆப்ஸ்

  • இன்ஸ்டாகிராம் – 10,20,000
  • சினாப்சாட் – 1,28,500
  • டெலிகிராம் -71,700
  • பேஸ்புக் -24,900
  • ட்விட்டர்- 12,300
  • யூடியூப் 12,500
  • வாட்ஸ்அப் 4,950

உலகம் முழுவதும் இன்ஸ்டாகிராமை 2 பில்லியனுக்கும் மேல் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த சூழலில், ஒவ்வொரு மாதமும் ஒரு மில்லியன் மக்கள் இந்த செயலியை நீக்குவதை தேடி பார்த்து இன்ஸ்டாகிராமை நீங்கினால் எதிர்காலத்தில் இன்ஸ்டாகிராமுக்கு பெரிய அளவில் வீழ்ச்சியை ஏற்படுத்தும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

மேலும், அதைப்போலவே அறிக்கையின் படி, சமூக வலைதளங்களை உலகம் முழுவதும் 480 கோடி பேர் பயன்படுத்தி வருகிறார்கள் எனவும், அதில் தினமும், 2 மணி 24 நிமிடங்கள் வரை சமூக வலைதளங்களில் தங்களுடைய நேரத்தை செலவிடுகின்றனர் எனவும் தெரியவந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.