INDvsWI:பந்து வீச்சில் மிரட்டிய பும்ரா ..! 100 ரன்னில் சுருண்ட விண்டீஸ்..!இந்தியா அபார வெற்றி ..!

இந்திய அணி மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணி  இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 22-ம் தேதி ஆன்டிகுவாவில் தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ய முதலில் களமிறங்கிய இந்திய அணி  தனது முதல் இன்னிங்ஸில் 297 ரன்கள் எடுத்திருந்தது.

முதல் இன்னிங்ஸில் அதிகபட்சமாக ரஹானே 81, ராகுல் 44 ரன்கள் குவித்தார்கள்.இதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஆட்டம் கிரெய்க் பிராத்வைட் தொடக்கத்திலேயே 14 ரன்களுடன் வெளியேற , மத்தியில் களமிறங்கிய ரோஸ்டன் சேஸ்  48 ரன்கள் குவித்தார். இறுதியாக வெஸ்ட் இண்டீஸ் 222 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இசாந்த் சர்மா 5 , முகமது ஷமி ,ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்நிலையில் 75 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை இந்திய அணி தொடங்கியது. தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால் 16 , கே.எல் ராகுல் 38 ரன்களுடன் வெளியேறினர். இதைத் தொடர்ந்து கேப்டன் கோலி, துணைக்கேப்டன் ரஹானே இருவரும் கைகோர்க்க சிறப்பாக விளையாடிய இருவருமே அரைசதம் விளாசினார்.

கேப்டன் கோலி 51 ரன்னில் வெளியேற பின்னர் ஹனுமா விஹாரி ,துணைக்கேப்டன் ரஹானே இருவரும் இணைந்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.முதல் இன்னிங்ஸை போல நிதானமாகவும் சிறப்பாகவும் விளையாடிய துணைக்கேப்டன் ரஹானே 102 ரன்கள் எடுத்து வெளியேறினார்.இதன் மூலம் டெஸ்ட் போட்டியில் ரஹானே தனது 10-வது சதத்தை நிறைவு செய்தார்.

சிறப்பாக விளையாடி வந்த ஹனுமா விஹாரி 93 ரன்கள் எடுத்து 7 ரன்னில் சதம் வாய்ப்பை இழந்தார்.இந்திய அணி 343 ரன்கள் இருக்கும் போது டிக்ளர் செய்தது இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 419 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டர்.

பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. ஆட்டம் தொடக்கத்திலேயே இருந்து  இந்திய அணி பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சில் தாக்கு பிடிக்க முடியாமல் வரிசையாக  விக்கெட்டை இழந்தார்கள். இதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணி 37 ரன்களுக்கு 7 விக்கெட்டை இழந்து பரிதாப நிலையில் இருந்தது.

அப்போது 8-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய கெமர் ரோச் அதிகபட்சமாக 38 ரன்கள் குவித்தார். இறுதியாக வெஸ்ட் இண்டீஸ் அணி 26.5 ஓவரில் 100 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது.

இதன் மூலம் இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி பந்து வீச்சில் பும்ரா  5  , இசாந்த் சர்மா 3 , முகமது ஷமி  2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

 

 

murugan

Recent Posts

உடல் எடையை குறைக்க விபரீத பயிற்சி.! 6 வயது குழந்தை உயிரிழந்த சோகம்.!

America: அமெரிக்காவில் 6-வயது சிறுவன் உடல் பருமனாக இருந்ததால் டிரெட்மில்லில் ஓட வைத்து, சில நாட்கள் கழித்து உயிரிழந்த பரிதாப சம்பவம். அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகரத்தில்…

20 mins ago

கல்குவாரியில் வெடி விபத்து – குவாரி நிர்வாகம் ரூ.12 லட்சம் நிவாரணம்!

Virudhunagar : விருதுநகர் மாவட்டம் ஆவியூர் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு, குவாரி நிர்வாகம் சார்பில் தலா ரூ.12 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே…

31 mins ago

502 Error.! திணறிய கூகுள்… பயனர்கள் அதிருப்தி.!

Google Down : கூகுள் தேடு பொறி, மற்றும் பிற கூகுள் சேவைகள் செயல்படவில்லை என சில பயனர்கள் புகார் அளித்து வருகின்றனர். நாம் உபயோகிக்கும் இணையத்தில்…

1 hour ago

நிலவில் தண்ணீர் இருக்கிறது.! உறுதி செய்தது நம்ம சந்திரயான்-3.!

Chandrayaan-3 : நிலவில் தண்ணீர் இருக்கிறது என்பதை சந்திராயன்-3 தரவுகளை கொண்டு ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். கடந்தாண்டு (2023) ஜூலை மாதம் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய…

1 hour ago

வாகனங்களில் ஸ்டிக்கர் கட்டுப்பாடு! முக்கிய தகவல் இதோ!

Stickers : வாகனங்களின் நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டினால் அபராதம் விதிக்கும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.  சமீபகாலமாக தனியார் வாகனங்களில் காவல்துறை, பத்திரிகையாளர், வழக்கறிஞர்,…

1 hour ago

விருதுநகர் கல்குவாரி விபத்து – நேற்று ஒருவர் இன்று ஒருவர் கைது.!

விருதுநகர் வெடிவிபத்து தொடர்பாக கல்குவாரியின் மற்றொரு உரிமையாளர் ராஜ்குமார் கைது செய்யப்பட்டார். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி மருந்து குடோனும் செயல்பட்டு…

2 hours ago