விரைவில் இந்தியா-பாகிஸ்தான் இடையே அணு ஆயுத போர்… 125 மில்லியன் மக்கள்பலியாவார்கள் என கணிப்பு

ஆண்டுதோறும்  உலகளாவிய சக்தி வாய்ந்த தலைவர்கள் ஜெர்மனியின் முனிச் நகரில் அமைதி மற்றும் ராஜதந்திரம் குறித்து  விவாதிக்க ஒரு மாநாடு நடத்தப்படும். இந்த வகையில், முனிச் நகரில் முடிந்த இந்த மாநாட்டை தொடர்ந்து, அங்கு ஓர் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், இந்தியாவின் காஷ்மீர் பிராந்தியத்தில் எந்தவொரு தீவிரவாத தாக்குதல் ஏற்பட்டாலும், அது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ராணுவ மோதலின் புதிய உச்சத்தை தொடும் என்றும், அதனால் ஏற்படும் தீவிரமான அபாயத்தால் இரு நாடுகளுக்கும் இடையே அணுஆயுத போர் ஏற்படும் என்றும், தற்போதைய சூழ்நிலையில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அணுசக்தி போர் 2025ல் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும்,  அவ்வாறு ஒரு சூழல் இரு நாடுகளுக்கும் ஏற்பட்டால் 50 முதல் 125 மில்லியன் மக்கள் கொல்லப்படக்கூடும் என்றும், தற்போது, இந்தியா மற்றும் பாகிஸ்தானில் தலா 100 முதல் 150  அணு ஆயுதங்கள் இருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது. மேலும், இரு  நாடுகளுக்கும் இடையிலான அணு ஆயுத போர் ஏற்பட்டால் இதில், 15 முதல் 100 கிலோடோன் அணு  ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் என்றும், மொத்தமாக 50 முதல் 125 மில்லியன் மக்கள் உடனடியாக பலியாவார்கள் என்றும் தெரிவித்துள்ளது. இந்தாண்டில் கவனிக்கப்பட வேண்டிய 10 மோதல்கள் பட்டியலில் ஆப்கானிஸ்தான்,ஏமன் மற்றும் பாரசீக வளைகுடா ஆகியவற்றுடன் இப்போது, காஷ்மீர் விவகாரமும் சேர்ந்துள்ளது.

author avatar
Kaliraj