தெலுங்கானாவில் மதிய உணவு சாப்பிட்ட 150 மாணவர்கள் உடல்நிலை பாதிப்பு

தெலுங்கானாவில் உள்ள ஐஐஐடி-பாசார் விடுதியில் மதிய உணவு சாப்பிட்ட 150 மாணவர்கள் உடல்நிலை பாதிப்பு.

தெலுங்கானாவின் மாவட்ட மாவட்டத்தில் உள்ள ஐஐஐடி-பாசார் என்றும் அழைக்கப்படும் ராஜீவ் காந்தி அறிவுத் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் விடுதியில், கிட்டத்தட்ட 150 மாணவர்கள் மதிய உணவு சாப்பிட்ட பின் வாந்தி மயக்கம் ஏற்பட்டது.

இதுக்குறித்து மாவட்ட ஆட்சியர் முஷாரப் அலி ஃபரூக்கி கூறுகையில், உடல் நலம் பாதிக்கப்பட்ட 150 மாணவர்களில் 50 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்ற மாணவர்கள் அனைவரும் நலமாக உள்ளனர் என்று கூறினார்.

உணவு விஷமாக மாறியதற்கான கரணங்கள் இன்னும் கண்டறியபடவில்லை.

மேலும், விடுதியின் மெஸ் ஊழியர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர் கூறினார்.

மாணவர்களுக்கு மத்திய உணவாக முட்டை கறி மற்றும் சாதம் வழங்கப்பட்டிருக்கிறது.

அதனை 500க்கு மேற்பட்ட மாணவர்கள் உட்கொண்டனர். அதில் பாதிக்க பட்ட மாணவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

author avatar
Varathalakshmi

Leave a Comment