அடேங்கப்பா.! சூப்பர் ஸ்டார், சூர்யா, விஜய் சேதுபதி.! இமானின் இமாலய லைன் அப்…!

இசையமைப்பாளர் டி இமான் இசையமைக்கும் படங்கள் குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது. 

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளர் டி.இமான் கடந்த 2001ஆம் ஆண்டு தமிழன் திரைப்படத்தில் இசையமைத்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து விசில், கிரி, திருவிளையாடல் ஆரம்பம், மருது, தொடரி, ஜில்லா ஆகிய திரைப்படங்களில் இசையமைத்ததன் மூலம் மிகவும் பிரபலமானார்.

மேலும், கடந்த 2019- ஆம் ஆண்டு இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் திரைப்படத்திற்கு துல்லியமான இசையை  கொடுத்திருந்தார். படத்தில் இடம்பெற்ற, கண்ணானே கண்ணே பாடலுக்காக தேசிய விருதை பெற்றார்.

இந்த நிலையில், தொடர்ந்து பல திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதனையடுத்து, டி இமான் இசையமைக்கும் படங்களை பற்றி பார்ப்போம். விஜய் லாபம், அண்ணாத்த, எதற்கும் துணிந்தவன், உடன் பிறப்பே, பொய்க்கால் குதிரை,பொன்மணிக்கவேல், பிரபு தேவா நடிக்கும் புதிய படம் மற்றும் சசிகுமார் நடிக்கும் புதிய படம் மேலும் சில படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.