ரஜினிக்கு அடுத்தபடியாக பரட்டை என பெயர் வாங்கியது நான் தான் போல..! – தமிழிசை சௌந்தரராஜன்

16 வயதினிலே படத்தில் ரஜினிக்கு பரட்டை என்ற பெயர் வந்தது. அடுத்த பரட்டை என்று பெயர் வாங்கியது நான்தான் போல, சுருட்டை முடி பறக்கிறது, அவ்வளவு பெரிய இதா?

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள், சென்னையில் செய்தியாளர் சந்திப்பின்போது நகைச்சுவையாக பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், ‘ஒரு முறைதான் விமானத்தில் சென்ற போது அருகில் இருந்த நபர் தன்னை மீம்ஸ் போடுபவர் என்று அறிமுகப்படுத்தினார். உடனே நான் கேட்டேன் என்ன பாத்தா எப்படி தெரியுது? எல்லாரும் என்னை மட்டும் மீம்ஸ் போடுறீங்க? யாரும் கருப்பா இல்லையா? குள்ளமா இல்லையா? யாரும் சுருட்ட முடி இல்லையா? என்று கேட்டேன்.

அதற்கு அந்த நபர் அக்கா உங்களை மீம்ஸ் போட்டால் தான் அதிக பார்வையாளர்கள் வருகிறது. எது வியாபாரம் ஆகிறது அது தானே அதிகம் பிடிக்கும். அதிக வியூஸ் வந்தால் வருமானம் வரும்.  இதனையடுத்து, விமானத்தில் இருந்து இறங்கும் போது அந்த நபர் அக்கா மன்னிச்சிடுங்க, இனி உங்களை மீம்ஸ் போட மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் அதற்கு நான் எனக்கு அவமானம் வருகிறது என்றாலும், உங்களுக்கு வருமானம் வருகிறது என்றால் நீங்கள் தொடருங்கள். என்னால் யாருக்காவது உதவி வருகிறது, என் தன்மானத்தை குறித்து உங்களுக்கு வருமானம் வருகிறது என்றால் தொடருங்கள் என தன்னம்பிக்கை ஊட்டியதாக கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், எப்போது பார்த்தாலும்  மீம்ஸ்களில் பரட்டை பரட்டை என்று போடுகிறார்கள். 16 வயதினிலே படத்தில் ரஜினிக்கு பரட்டை என்ற பெயர் வந்தது. அடுத்த பரட்டை என்று பெயர் வாங்கியது நான்தான் போல, சுருட்டை முடி பறக்கிறது, அவ்வளவு பெரிய இதா? காலேஜ் படிக்கும்போது என்னுடைய உடைக்கே ரசிகர்கள் கூட்டம் உண்டு என்று நகைச்சுவையாக பேசியுள்ளார்.

லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Recent Posts

IPL2024: வரலாறு சாதனை… சிக்ஸர் மழையால் பஞ்சாப் அபார வெற்றி..!

IPL2024: பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 2 விக்கெட்டைகள் இருந்து 262 ரன்கள் எடுத்தனர். இதனால் பஞ்சாப் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இன்றைய போட்டியில்…

6 hours ago

‘இந்த விதியை சேர்த்தது .. ரொம்பவே முக்கியம் தான்’ !!சிஎஸ்கே அணியின் கான்வே ஓபன் டாக் !!

Devon Conway : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இந்த விதி நல்லது தான் என ஆதரித்துள்ளார் சிஎஸ்கே அணியின் வீரரான டேவான் கான்வே. ஐபிஎல் தொடரின்…

8 hours ago

பேட் ரூம் காட்சியில் படு கிளாமராக நடித்த பிரியா ஆனந்த்! அதுவும் அந்த புது படத்திலா?

Priya Anand : நடிகை பிரியா ஆனந்த்  படுகிளாமராக நடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக…

9 hours ago

காமெடி வேற லெவல்! சிரிக்க வைக்கும் ‘இங்க நான் தான் கிங்கு’ டிரைலர்!

Inga Naan Thaan Kingu : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள இங்க நான் தான் கிங்கு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து…

10 hours ago

பட்ஜெட் விலையில் அசத்தல் 5G ஸ்மார்ட்போன் !! ரயில்மி சி 65யின் அம்சம், விலை விவரம் இதோ !!

Realme C65 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த 5ஜி ஸ்மார்ட் போனான ரியல்மி சி65 5ஜி வெளியிட்டது. ரியல்மி நிறுவனம் இந்த ஆண்டில் அடுத்தடுத்து…

10 hours ago

அதிர்ச்சி ரிப்போர்ட்.! 75% பேர் போலியான DeepFake வீடியோக்களை பார்த்துள்ளனராம்..!

DeepFake : 75 சதவீத இந்தியர்கள் போலியான டீப்ஃபேக் வீடியோக்களை பார்த்துள்ளனர் என ஓர் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் AI எனும்…

10 hours ago