நான் இறக்கவில்லை உயிரோடுதான் இருக்கிறேன் -ராணுவ வீரர்.!

லடாக் எல்லை பகுதிகளில், இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் நேற்று முன்தினம் இந்திய ராணுவம் தரப்பில் 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. 

இதில், பீகாரை சேர்ந்த சுனில் ராய் என்பவர் உயிரிழந்ததாக  நேற்று முன்தினம் இரவு அவரின் குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை சுனில் ராய் தனது மனைவிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் உயிருடன் இருப்பதாக கூறியுள்ளார்.

இதனால், சுனில் ராய் வீட்டில் குழப்பம் ஏற்பட்டது. ஆனால், உண்மையாக லடாக்கில் நடைபெற்ற மோதலில் சுனில் குமார் என்ற வீரர் வீரமரணம் அடைந்தார். ஆனால், சுனில் ராய் உயிரிழக்கவில்லை.

இருவருமே பீகார் மாநிலத்தை சார்ந்தவர்கள். சுனில் ராய் சரண் மாவட்டத்தை சார்ந்தவர்.  சுனில் குமார் பாட்னாவில் உள்ள பிஹாட்டாவைச் சேர்ந்தவர். இருவருமே  லடாக்கில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனால், இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது.

கால்வான் பள்ளத்தாக்கில் பீகாரைச் சேர்ந்த மூன்று வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அதில் சுனில் குமார், அமன் சிங் மற்றும் குந்தன் குமார்  ஆகியோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.