நான் இதை தொடங்க உள்ளேன்;உங்கள் ஆதரவு தேவை சவுரவ் கங்குலி ரகசிய பதிவு !

பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ரகசிய பதிவை வெளியிட்டுள்ளார்,அவர் புதிய மற்றும் பெரிய ஒன்றைத் தொடங்க ஆர்வமாக உள்ளதாகவும், அங்கு மக்களுக்கு உதவ விரும்புவதாகவும் பதிவிட்டுள்ளார்.

அவர் பதிவில்,1992ல் கிரிக்கெட்டுடனான எனது பயணம் தொடங்கி 2022 30வது ஆண்டை நிறைவு செய்கிறது. அதன்பிறகு, கிரிக்கெட் எனக்கு நிறைய கொடுத்துள்ளது. மிக முக்கியமாக, இது உங்கள் அனைவரின் ஆதரவையும் எனக்கு அளித்துள்ளது.

பயணத்தின் ஒரு பகுதியாக இருந்த, எனக்கு ஆதரவளித்த மற்றும் நான் இன்று இருக்கும் இடத்தை அடைய உதவிய ஒவ்வொரு நபருக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன்.

இன்று, நான் பலருக்கு உதவக்கூடிய ஒன்றைத் தொடங்க திட்டமிட்டுள்ளேன். என் வாழ்க்கையின் இந்த அத்தியாயத்தில் நான் நுழையும்போது உங்கள் ஆதரவைத் தொடரும் என்று நம்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

author avatar
Dinasuvadu Web

Leave a Comment