இந்த ஒரு பழத்தை தினமும் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா…?

தினமும் ஒரு கிவி பழம் சாப்பிட்டால் நமது உடலுக்கு என்னென்ன நன்மைகள் ஏற்படும்?

கிவி பழம் அதிகமானோர் விரும்பி சாப்பிடுவதில்லை. ஆனால், இந்த பலத்தில் நமது உடலுக்கு நன்மை பயக்க கூடிய பலவகையான சத்துக்கள் உள்ளது. கிவியில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. வைட்டமின்கள் ஏ, பி6, பி12, ஈ, பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் மற்றும் பல ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. இரும்புச்சத்து, மற்றும் குறைந்த கலோரிகளை கொண்டுள்ளது.

தற்போது இந்த பதிவில் தினமும் ஒரு கிவி பழம் சாப்பிட்டால் நமது உடலுக்கு என்னென்ன நன்மைகள் ஏற்படும் என ஆபார்ப்போம்.

நோயெதிர்ப்பு சக்தி 

immunity
immunity [Imagesource : representative]

கிவி பழத்தில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. ஒரு பழம் உங்கள் தினசரி வைட்டமின் சி தேவையை  பூர்த்தி செய்ய உதவும். வைட்டமின் சி ஆன்டிபாடிகளின் உற்பத்தி மற்றும் செயல்பாட்டை ஆதரிக்கிறது, மேலும் ஆரோக்கியமான நோயெதிர்ப்பு அமைப்புக்கு நல்ல ஆன்டிபாடி செயல்பாடு முக்கியமானது. செரோடோனின் உற்பத்திக்கு பிளஸ் சி இன்றியமையாதது,  நமது மனநிலையையும் மேம்படுத்த உதவும்.

டெங்கு 

கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகும் காலத்தில், டெங்கு காய்ச்சல் உருவாகிறது. இந்த காய்ச்சலுக்கு எதிராக போராட கூடிய சக்தி இந்த பழத்தில் அதிகமாக உள்ளது. ஏனெனில் டெங்கு காலத்தில் பிளேட்லெட்டுகளை வளர்ப்பது மிகவும் கவலைக்குரியது. நமது பிளேட்லெட்டுகள் ஒன்றிணைந்து சிறப்பாகச் செயல்பட உதவும் வைட்டமின் சி நிறைந்துள்ளஅது. கிவி எளிதில் ஜீரணிக்கக்கூடியது.

dengu
dengu [Imagesource ; bbc]

 ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் எலக்ட்ரோலைட் பேலன்சர் பொட்டாசியம் நிறைந்தது. இவை அனைத்தும் இந்த நேரத்தில் சாப்பிட சிறந்த உணவாக அமைகின்றன. வைட்டமின் சி, வைட்டமின் B9 (ஃபோலேட்)  இவை இரண்டும் இரத்த பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும்.

ஆக்சிஜனேற்றம் 

கிவிப்பழத்தில் பல உயிர்வேதியியல் சேர்மங்கள் நிறைந்துள்ளன, அவை ஃப்ரீ ரேடிக்கல்கள், மன அழுத்தம்,  நாம் உண்ணும்  உணவுகளால் உடலில் உற்பத்தியாகும் தீங்கு விளைவிக்கும் துணைப் பொருட்களிலிருந்து பாதுகாக்க உதவும் ஆக்ஸிஜனேற்ற திறன் கொண்டவை.

இதய பிரச்னை

heart health
heart health [Imagesource : representative]

 

கிவியில் உள்ள வைட்டமின் சி, பாலிபினால்கள் மற்றும் பொட்டாசியம் அனைத்தும் தனித்தனியாகவும், இரத்த நாளங்கள் மற்றும் இதயத்தைப் பாதுகாக்கவும் மற்றும் உங்கள் இரத்தத்தில் உள்ள கொழுப்புகளின் (ட்ரைகிளிசரைடுகள்) அளவைக் குறைக்கவும் செயல்படுகின்றன. எனவே இது நமது உடலில் இதயம் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.

சரும அழகு 

facebeauty
facebeauty [Imagesource – Representative]

உடலில் நல்ல pH சமநிலை இருப்பது ஒரு நல்ல தோற்றமுடைய சருமத்திற்கு ஒமுக்கியமாகும். கிவி இயற்கையில் காரத்தன்மை கொண்டதாக இருப்பதால், நாம் உண்ணும் அமில உணவுகளின் விளைவுகளை எதிர்கொள்ள இது உதவும். கூடுதலாக, கிவியில் உள்ள வைட்டமின் சி தோலில் கொலாஜன் உருவாவதற்கு முக்கியமானது, இது தோல், தசைகள், எலும்புகள் மற்றும் தசைநாண்களை பராமரிக்கக்கூடிய பண்பு கொண்டது.

RELATED ARTICLES